வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 1, 2017

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் கட்டடம் ஒன்று இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட ஆரம்ப பாடசாலையின் வகுப்பறை கட்டடத் தொகுதி மற்றும் சிறுவர் விளையாட்டு திடல் என்பன திறந்து வைக்கப்பட்டன. வவுனியா தெற்கு வலய கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர் அன்ரன் சோமராஜா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் அதிபர் திருமதி.தியாகசோதி யுவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆரம்ப

வளர்ச்சி பெற்று வருகின்ற தொழிலுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி எமது இலக்குகளை அடையவேண்டும்- சிறிதரன் (காணொளி)

Posted by - February 1, 2017

வளர்ச்சி பெற்று வருகின்ற தொழிலுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி எமது இலக்குகளை அடையவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி நேற்று பாடசாலை அதிபர் திரு.ஓங்காரமூர்த்தி தலைமையில் பாடசாலை மைதனத்தில் நடைபெற்றுள்ளது. இதில் முதன்மை விருந்திரனாக கலந்;துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பிர் சிவஞானம் சிறிதரன் நெடுந்தீவு மண்ணில் பிறந்தவர்கள் வரலாற்றில் பல பதிவுகளை மேற்கொண்டு அடையாங்களோடு இன்றும் இலங்கையிலும் பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வருவதாக

யாழ்ப்பாணத்தில், வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 5 பேர் கைது(காணொளி)

Posted by - February 1, 2017

யாழ்ப்பாணத்தில், வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவரை, வாள்களுடன் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். 18 வயது தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து வாள்கள், மோட்டார் சைக்கிள்கள், கையடக்கத் தொலைபேசி என்பனவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களாக பரவலாக இடம்பெற்றுவரும் வாள்வெட்டுச் சம்பவங்களை அடுத்து பொலிஸாரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுவருகின்றனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டுச்

நாட்டில் இரண்டு பிரதான கட்சிகளையும் ஒன்றாக இணைத்த பெருமை சிறுபான்மை கட்சிகளுக்கு உண்டு- எம்.எஸ்.எஸ்.அமீர்அலி(காணொளி)

Posted by - February 1, 2017

நாட்டில் இரண்டு பிரதான கட்சிகளையும் ஒன்றாக இணைத்த பெருமை சிறுபான்மை கட்சிகளுக்கு உண்டு என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார். இரண்டு பிரதான கட்சிகளும் எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களை ஏமாற்றிவிடக் கூடாது எனவும் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுயகைத்தொழில் மற்றும் வீட்டு தோட்டம் செய்வோருக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதன்போது தெரிவுசெய்யப்பட்ட 350 தொழிலாளர்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டம் வறுமை நிலையில் உள்ளதாக

கிளிநொச்சியில், ஏ-9 வீதியில் பழைய வைத்தியசாலைக்கு அருகில் பஸ் தரிப்பிடம் திறப்பு(காணொளி)

Posted by - February 1, 2017

கிளிநொச்சியில், ஏ-9 வீதியில் பழைய வைத்தியசாலைக்கு அருகில் பஸ் தரிப்பிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அமரர் பொன்.விநாயகமூர்த்தி மற்றும் அவரது மகனான வி.சந்துரு ஆகியோர் நினைவாக அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளிலும் மக்கள் சேவைகளிலும் முன்மாதிரியாக திகழ்ந்த சமூகப்பற்றாளர் பொன்.விநாயகமூர்த்தி நினைவாகவும், யுத்தத்தின் போது உயிரிழந்த அவருடைய மகன் நினைவாகவும், அவரது குடும்பத்தினரால் குறித்த பேருந்துத் தரிப்பிடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் கலைத்துறை வரலாற்றில் முதன்முறையாக மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஓரே மேடையில் ஓரு நிகழ்வில் ஏழு நூல்கள் வெளியிட்டு சாதனை (காணொளி)

Posted by - February 1, 2017

கிழக்கு மாகாணத்தின் கலைத்துறை வரலாற்றில் முதன்முறையாக மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஓரே மேடையில் ஓரு நிகழ்வில் ஏழு நூல்கள் வெளியிட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பண்பாட்டலுலல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஏழு நூல்கள் வெளியீடும் கிழக்கு மாகாணத்தில் உள்ள கலை மன்றங்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்றது.

டொனால்ட் ட்ரம்புக்கு பின்னடைவு

Posted by - February 1, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டு முக்கிய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான செனட் வாக்கெடுப்பினை அமெரிக்க ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் புறக்கணித்து வருகின்றனர். இதனால் வாக்கெடுப்பு பிற்போடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் திரைசேறி செயலாளர் ஆகியப் பதவிகளுக்காக டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ள இரண்டு பேரின் நிதிப் பின்னணி குறித்த தகவல்கள் இல்லாமல் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது என்று ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதனால் டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்று

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

Posted by - February 1, 2017

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. அலவ்வ – கிரிஉல்ல பிரதான வீதியில் அமைந்துள்ள குடகம்மன பிரதேசத்தில் இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்தத் திட்டமானது மீரிகமயிலிருந்து குருநாகல் வரையிலான இரண்டாம் கட்டம் 39 கிலோமீற்றர்களை கொண்டதாகும். இதில் மீரிகம, நாக்கலகமுவ, மல்பிட்டிய, பொத்துஹர, குருநாகல் ஆகிய பகுதிகளில் ஐந்து இடைமாறல்களும் அமைக்கப்படவுள்ளன. 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த நிர்மாணப் பணிகளை

பௌத்தத்தை வளர்க்க நடவடிக்கை – மைத்திரி

Posted by - February 1, 2017

தேரவாத பௌத்தத்தின் மத்திய நிலையமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கான அனைத்து பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். பௌத்த பிக்குகள் குழுவினருடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ஞாயிறு பௌத்த பாடசாலை கல்விக்கான பாடத்திட்டங்களை விரிவுபடுத்தி அதனை பலப்படுத்துவது முக்கியம் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரிவெனா கல்வியை முன்னேற்றம் செய்வதற்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பிக்குகள் இதன்போது மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். விகாரைகளை அடிப்படையாகக் கொண்டு நிலையான அபிவிருத்திக்கான

க்ரோட்டனை உண்ண வேண்டாம்

Posted by - February 1, 2017

அலங்காரத்துக்காக வளர்க்கப்படுகின்ற க்ரோட்டன் எனப்படும் செடிவகைகளை மருந்துக்காக உட்கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருந்தாக்கல் மற்றும் நச்சியல் திணைக்களத்தின் தலைவர் வைத்தியர் சன்ன ஜெயசுமன இதனைத் தெரிவித்துள்ளார். சீன வைத்திய முறைப்படி வயிற்றோட்டத்தைக் குணப்படுத்த க்ரோட்டன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதில் காணப்படும் ஒருவகையான எண்ணெய் திரவம், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விசத்தன்மைக் கொண்டது. எனவே அதனை உட்கொள்ள வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.