அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டு முக்கிய அமைச்சரவை உறுப்பினர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான செனட் வாக்கெடுப்பினை அமெரிக்க ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் புறக்கணித்து வருகின்றனர்.
இதனால் வாக்கெடுப்பு பிற்போடப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் திரைசேறி செயலாளர் ஆகியப் பதவிகளுக்காக டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ள இரண்டு பேரின் நிதிப் பின்னணி குறித்த தகவல்கள் இல்லாமல் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது என்று ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்று இரண்டாவது வாரமாகும் நிலையில் இன்னும் முக்கிய பதவிகளுக்கான நியமனங்களை வழங்கமுடியாதுள்ளது.
அதேநேரம் அமெரிக்க சட்ட மா அதிபர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜெஃப் செசன் குறித்த வாக்கெடுப்பும் பிற்போடப்பட்டுள்ளது.

