ஸ்டாலின் தலைமை இருக்கும் வரை தி.மு.க.வுக்கு வெற்றி இல்லை: மு.க அழகிரி
தி.மு.க.வின் செயல்தலைவராக இருக்கும் வரை அக்கட்சி வெற்றிபெறாது என்று முன்னாள் மத்திய மந்திரி மு.க அழகிரி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வின் செயல்தலைவராக இருக்கும் வரை அக்கட்சி வெற்றிபெறாது என்று முன்னாள் மத்திய மந்திரி மு.க அழகிரி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
பணிப்பெண்ணாக இலங்கையில் இருந்து சவதி அரேபியா சென்ற பெண் ஒருவர் ஒருமாதத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் சடலம் நேற்று நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கெகிராவை கிதுல்ஹிடியாவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், கடந்த 2011 ஆம் ஆண்டு அவர் தொழில் நிமித்தம் சவூதி அரேபியா சென்றிருந்தார். மாடி வீடொன்றில் இருந்து கடந்த 3 மாதத்திற்கு முன்னர் வீழ்ந்த குறித்த பணிப்பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தமது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போஸ்டர், கட்அவுட் உட்பட தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தும் விளம்பரங்கள் அனைத்தையும் அகற்ற நடவடிக்கை எடுக்க தவறும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். போஸ்டர், கட்அவுட், பெனர் என்பன நீக்கப்படாத பிரதேசங்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மேலதிக அவதானங்களை செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தேர்தலின் போது சகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளும்
ரஷ்யாவினால் விதிக்கப்பட்டிருந்த தேயிலைக்கான தடையை மிக விரைவில் நீக்கிக் கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முடியுமாக இருந்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனாதிபதியின் உயர்ந்த மட்ட இராஜதந்திர தொடர்பே இந்த நிலைக்குக் காரணம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
விதை உருளைக்கிழங்குகள் இல்லாமையால் யாழ்ப்பாணத்தில் சுமார் 2000 விவசாயிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த வருடம் அரசாங்கத்தின் வேலைத் திட்டமொன்றிற்கு அமைய, யாழ்ப்பாணத்தில் 10000 விவசாயிகளுக்கு மானிய முறையின் கீழ் அரசாங்கத்தினால் விதை உருளைக்கிழங்குகள் வழங்கப்பட்டன. எனினும், இவ் வருடம் இந்த வேலைத் திட்டம் செயற்படுத்தப்படாமையால், யாழ்ப்பாணத்தில் உருளைக்கிழங்கு விவசாயிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை, யாழில் கடந்த வருடம் அரசாங்கம் மானிய முறையில் உருளைக்கிழங்குகளை வழங்கியமையால், தனியார் துறையினரும் இம்முறை விதை உருளைக்கிழங்குகளை பெருமளவில் விற்க
கடந்த 3 மாதகாலப் பகுதிக்குள் புகையிரதங்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் புகையிரத திணைக்களத்தின் வருமானம் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் புகையிரத திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கம்பஹா, வெயாங்கொட, றாகம ஆகிய ரயில் நிலையங்களிலும் ஹோமாகம, கொட்டாவ, பாதுக்க போன்ற ரயில் நிலையங்களிலும் அதிக வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு நாளைய (28) தினம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை இணைத்துக் கொள்வதற்கான திட்டமொன்று இருந்ததாகவும், அக்கனவு தற்பொழுது நிராசையாக மாறியுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, இப்போழுது அக்கட்சியில் ஜி.எல்.பீரிஸும், பசில் ராஜபக்ஷவும் மாத்திரமே அங்கம் வகிப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன், இன்னுமொருவர் இருக்கிறார். அவர் தான் வலல்லாவிட பிரதேச சபையின் முன்னாள் தலைவர். அக்கட்சியுடன் அதிகமாக இருப்பது ஊழல் மோசடியில் ஈடுபாடுள்ளவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம், 26ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் ஜனவரி 11ஆம் திகதி முதல் தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்குச் சீட்டுக்களை அனுப்பிவைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தபால் மூலமாக வாக்களிப்பவர்களிடத்திலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப் பங்களை பரிசீலனைக்குட்படுத்தி எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம், 9 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்காளர்
கொழும்பு துறைமுக நகரத்திட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஆகியோர் இணைந்து நாட்டிய அடிக்கல்லை தகர்த்து அதனைக் கடலில்போட்டுள்ளனர். அவ்விடயம் சீனாவிற்குத் தெரியவந்தால் அந்நாடு இலங்கையுடனான தொடர்பை தொடர்ந்தும் பேணுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருந்த தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள்
அரசாங்க ஊழியர்களுக்கு அடுத்த மாதத்தில் மேலும் ஒரு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் நிறுவனங்களுக்கான பணிப்பாளர் நாயகம் டபிள்யு.டி.சோமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கம் பெற்றுக்கொடுத்த 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு 5 கட்டங்களாக வருடத்திற்கு வருடம் அரச ஊழியர்களுக்கு உரித்தாகின்றது. இது 2020 ஆம் ஆண்டு பூர்த்தியாகின்றது. இது தொடர்பான சகல அறிவித்தல்களும், சம்பள அதிகரிப்பு முறைமைகளும், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். 10 ஆயிரம் கொடுப்பனவுக்கு மேலதிகமாக