அனைத்து வாகன சாரதிகளினதும் உடல் பாகங்களை தானம் செய்யும் நடைமுறை அறிமுகம்

Posted by - February 5, 2017

அனைத்து வாகன சாரதிகளினதும் உடல் பாகங்களை தானம் செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. வீதி விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் அனைத்து வாகன சாரதிகளினதும் உடல் பாகங்களையும் வேறு நோயாளிகளுக்கு தானம் செய்யும் நடைமுறையொன்று இலங்கையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பில் அனைத்து வாகன சாரதிகளினதும் விருப்பத்தை அறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீதி விபத்து ஒன்றின் மூளைச் சாவடையும் சாரதி ஒருவரின் உடல் பாகங்களை பெற்றுக் கொண்டு வேறும் ஓர் அவசியமான

போர்க்குற்ற விசாரணைகளுக்கு அவகாசம் கோரும் நிலைப்பாட்டில் அரசாங்கம்

Posted by - February 5, 2017

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள தொடர்ந்தும் அவகாசம் கோரும் நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் தடைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அரசாங்கம் சர்வதேசத்தின் முன் இணக்கம் தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையத்தின் பொதுக்கூட்டத்தின் போது இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு வருடகாலம் அவகாசம் வழங்கப்பட்டது. எனினும் இதுவரை போர்க்குற்றங்கள் தொடர்பில்

மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமை ரத்து செய்யப்படாது-ராஜித சேனாரத்ன

Posted by - February 5, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமை ரத்து செய்யப்படாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமையை ரத்து செய்வதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நீதிமன்றக் கட்டமைப்பு சுயாதீனமான அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமையை ரத்து செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக செய்யப்பட்டு வரும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையோ, அடிப்படையோ கிடையாது என ராஜித சேனாரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின்

கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த கூட்டம் காலியில்………………..

Posted by - February 5, 2017

கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த கூட்டம் காலியில் நடத்தப்பட உள்ளது கூட்டு எதிர்க்கட்சியினால் “மாற்றத்தின் ஆரம்பம்” என்ற தொனிப்பொருளில் பேரணிகளும் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதனொரு கட்டமாக அடுத்த மாத ஆரம்பத்தில் காலியில் இவ்வாறான ஓர் கூட்டம் நடத்தப்பட உள்ளது. காலி நகரில் அடுத்த கூட்டத்தை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே கொழும்பு வார இறுதி ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில், அரசாங்கம் மக்கள் விரோத ஆட்சியை நாட்டில் முன்னெடுத்து வருகின்றது. அரசாங்கத்தின்

சீனாவின் பட்டுப்பாதை திட்டம் – சிறிலங்காவில் வலுக்கும் மனக்கசப்பும் எதிர்ப்பும்!

Posted by - February 5, 2017

கேந்திர முக்கியத்துவம் மிக்க அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை மேலும் விருத்தி செய்தல் மற்றும் இதற்கருகில் பாரியதொரு கைத்தொழில் வலயம் ஒன்றை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில் கடந்த ஆண்டின் இறுதியில் சீனா கைச்சாத்திட்டது.

பிரதமர் மோடி மீது கெஜ்ரிவால் பாய்ச்சல்

Posted by - February 5, 2017

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அவருக்கும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையே பனிப்போர் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் முறைகேடு இருப்பதாக வருமான வரித் துறை தெரிவித்து இருந்தது. தணிக்கை அறிக்கையை ஆய்வு செய்ததில் நன்கொடை தொகையில் 27 கோடி முரணாகவும், தவறாகவும் இருப்பதாக தெரிவித்தது. இதனால் ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு

இலங்கை மலேசியா உறவில் நன்மைகள் வேண்டும் – முஸம்மில்

Posted by - February 5, 2017

இலங்கை மற்றும் மலேசியாவிற்கிடையிலான உறவுகளில் பரஸ்பர நன்மைகள் ஏற்படுத்தி கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஏ.ஜே.எம் முஸம்மில் இதனை தெரிவித்துள்ளார். அந்த நன்மைகள் இரு நாடுகளுக்கிடையிலான அனைத்து துறைகளிலும் தங்கியிருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மலேசியா இலங்கையின் முக்கிய வர்த்தக கூட்டணி நாடுகளில் ஒன்றாகும். எனவே வர்த்தக துறையையில் இரு நாடுகளுக்கும் உள்ள உறவை மேலும் வலுவூட்ட வேண்டும் எனவும் மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

சசிகலா நியமனம் – விளக்கம் வேண்டும் – தேர்தல் ஆணையம் கோரிக்கை

Posted by - February 5, 2017

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, சசிகலா புஷ்பா அளித்த முறைபாட்டுக்கு விளக்கமளிக்குமாறு, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, இந்திய தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு கடந்த மாதம் முறைப்பாட்டு கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில், அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டு இருப்பது கட்சியின் விதிமுறைகளுக்கு

யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்கின்றார்கள்

Posted by - February 5, 2017

இன்று யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்கின்றார்கள். வாள்வெட்டுக்கள் தொடர்பில் நாளாந்தம் பத்திரிகையில் பார்க்க முடிகிறது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்பை விமர்சித்த ட்ரம்ப்

Posted by - February 5, 2017

தம்முடைய உத்தரவுக்கு எதிராக அமெரிக்க உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை அமெரிக்க ஜனாதிபதி விமர்சித்துள்ளார். அண்மையில் 7 முஸ்லிம் நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார். மேலும் சிரியா அகதிகள் உள் நுழைய நிரந்தர தடையையும் விதித்தார். இது அமெரிக்காவில் அதிருப்தியை ஏற்படுத்தி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து ட்ரம்பின் இந்த உத்தரவுக்கு இடைகால தடை விதித்து அமெரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில் அரசாங்கத்தின்