இலங்கை மலேசியா உறவில் நன்மைகள் வேண்டும் – முஸம்மில்

252 0

இலங்கை மற்றும் மலேசியாவிற்கிடையிலான உறவுகளில் பரஸ்பர நன்மைகள் ஏற்படுத்தி கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஏ.ஜே.எம் முஸம்மில் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த நன்மைகள் இரு நாடுகளுக்கிடையிலான அனைத்து துறைகளிலும் தங்கியிருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் மலேசியா இலங்கையின் முக்கிய வர்த்தக கூட்டணி நாடுகளில் ஒன்றாகும்.

எனவே வர்த்தக துறையையில் இரு நாடுகளுக்கும் உள்ள உறவை மேலும் வலுவூட்ட வேண்டும் எனவும் மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.