மாலபே சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தடியடி தாக்குதல் நடத்தக் கூடாது -மகிந்த ராஜபக்ச
மாலபே சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தடியடி தாக்குதல் நடத்தக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமது குறைகளை முன்வைக்க வேறு ஒருவரும் இல்லாத காரணத்தினாலேயே தமது குறைகளை கூற ஜனாதிபதியை தேடிச் செல்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். குருணாகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மருத்துவ மாணவர்கள் எதிர்கால மருத்துவர்கள், அவர்கள்

