கேப்பாப்புலவில் காணி மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்தித்தார் அமைச்சர் ப.சத்தியலிங்கம்

389 0

கேப்பாப்புலவில் இன்று ஆறாவது நாளாக காணி மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் சந்தித்துள்ளார்.

இந்த போராட்டத்திற்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளதோடு, போராட்டக்காரர்கள் தமது உடல்ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை இன்று பிற்பகல் 5:30 மணியளவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் நிலைப்பாட்டை ஆராய்ந்துள்ளார்.

நேற்றைய தினம் முல்லைத்தீவில் 69 ஆவது சுதந்திரதினத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சிறுகைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியூதீன் பின்னர் கேப்பாப்புலவுக்கு சென்று பொதுமக்களுடன் கலந்துரையாடியதுடன், விமானப்படை தளபதியுடனும் கலந்துரையாடி உள்ளார்.