அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கி நிதிகளை தனது சொந்த தேவைகளுக்காக செலவு செய்துள்ளார் -வசந்த சமரசிங்க

248 0

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், மத்திய வங்கி நிதிகளை தனது சொந்த தேவைகளுக்காக செலவு செய்துள்ளார் என ஊழலுக்கு எதிரான குரலின் அமைப்பாளர் வசந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அர்ஜூன் மகேந்திரன், 21 மாதங்களில் 163 நிகழ்வுகளுக்கு, 66 மில்லியன் ரூபா மத்திய வங்கி நிதிகளை முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளார் என வசந்த சமரசிங்க இன்று தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் மகேந்திரன் பதவி வகித்த காலத்தில் அவரது வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அவரது செலவீனங்கள் குறித்து மத்திய வங்கி கணக்காய்வு அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

ஒரு முறை விளையாட்டு வீரர்கள் அணியும் மேலாடை அணிவதற்கு அவர் 2 இலட்சம் செலவளித்துள்ளார் என்றும் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நிகழ்வின் போது அர்ஜூன் மகேந்திரன் ஒரே நாளில் இரண்டு தனித்தனி விடுதிகளில் தங்கியிருந்தார் போன்ற முறைகேடுகளும் கணக்காய்வு அறிக்கையின் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், அர்ஜூன் பிரதமரின் நண்பர் என்றும் பிரதமருக்கு கீழ் அவர் வேலை செய்துள்ளார் என்றும் வசந்த சமரசிங்க் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் விசேட பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி,140,000 ருபாவை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எனவே, முன்னாள் மத்திய வங்கி அளுநரும் நீண்ட காலம் சிறையில் அடைக்க வேண்டும் என்று ஊழலுக்கு எதிரான குரலின் அமைப்பாளர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அர்ஜூனுக்கு எதிராக நிதி மோசடி விசாரணை பிரிவில்,முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்