சுமந்திரனைக் கொல்லும் திட்டம் பிரான்சில் தீட்டப்பட்டதாம்

Posted by - February 6, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப்  படுகொலை செய்வதற்கான திட்டம், பிரான்சில் தீட்டப்பட்டதாக, விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கேப்பாபுலவு மக்களின் கோரிக்கை தொடர்பினில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் -சம்பந்தன்

Posted by - February 6, 2017

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு மக்களின் நியாயமான கோரிக்கை தொடர்பினில் பாதுகாப்பு அமைச்சு இனியும் காலங்கடத்தாது உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்து 3 நாள் கடந்து விட்டபோதும் ஆக்க பூர்வமாக எவையும் மேற்கொள்ளப்பனவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

முதல்-அமைச்சராக சசிகலா தேர்வு – பிரதமர் தலையிட சசிகலா புஷ்பா எம்.பி. கோரிக்கை

Posted by - February 6, 2017

சட்டசபை அ.தி.மு.க. கட்சி தலைவராக (முதல்-அமைச்சர்) தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சசிகலாவுக்கு எந்த தகுதியும் கிடையாது என  சசிகலா புஷ்பா குறிப்பிட்டுள்ளார். சசிகலா புஷ்பா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது அதனை குறிப்பிட்டார். அவர் கட்சிப்பணியோ, மக்கள் பணியோ ஆற்றியது கிடையாது. ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருந்த போது அவர் சசிகலாவை ஏன் முதல்-அமைச்சராக அறிவிக்கவில்லை? அவர் நினைத்து இருந்தால் இவரை நியமித்து இருக்கலாமே? ஏன் பன்னீர்செல்வத்தை நியமித்தார்? சசிகலா மீது வழக்கு இருக்கிறது. சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு நிலுவையில்

சிறுவன் ஒப்படைப்பு – இந்தியாவுக்கு பாகிஸ்தான் நன்றி

Posted by - February 6, 2017

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த பெண் ரோகினா கியானி. இவருக்கும், காஷ்மீரைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. திருமணமான சில வருடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன்-மனைவி இருவரும் பிரிந்தனர். 5 வயதான சிறுவன் இப்திகார் அகமது தாயுடன் வசித்து வந்தான். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரோகினா கியானியின் கணவர் சிறுவன் இப்திகார் அகமதை துபாயில் நடைபெறும் திருமண விழாவிற்கு அழைத்துச் செல்வதாக பொய் கூறி, அவனை

டீசல் கசிவை ஏற்படுத்திய கப்பல்களை பறிமுதல் செய்யவேண்டும் – தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு

Posted by - February 6, 2017

சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 27ஆம் திகதி  2 வணிக கப்பல்கள் மோதிக் கொண்டன. இதில் டீசல் ஏற்றி வந்த கப்பல் பலத்த சேதமடைந்து. அதில் இருந்து ஏராளமான டன் டீசல் கடலில் கொட்டியது. மெரினா கடற்கரையை கடந்து திருவான்மியூர் கடற்கரை வரை பரவியுள்ள இந்த டீசல் படிமத்தை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வக்கீல் சுமீர் சோதி மூலம் அஸ்வினி குமார்

நந்தினி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Posted by - February 6, 2017

நந்தினி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது அரியலூர் மாவட்டதைச் சேர்ந்த நந்தினிக்கு ஏற்பட்ட பாலியல் கொடூர மரணம். அரியலூர் அருகேயுள்ள சிறுகடம்பூரைச் சேர்ந்த 16 வயது பெண் நந்தினி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி நந்தினி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோரால் காவல்துறையில்  முறைப்பாடு செய்யப்பட்டது. காவல்துறை இந்த முறைப்பாட்டை அலட்சியப்படுத்தி

சசிகலா தெரிவு, ஜெயலலிதா கொள்கைக்கு எதிரானது – ஸ்டாலின்

Posted by - February 6, 2017

தமிழக சட்ட மன்ற குழு தலைவராக அண்ணா திராவிட முன்னேறக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா நியமிக்கப்பட்டுள்ளமையானது, மக்களினதும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைக்கும் விரோதமானது என தெரிவிக்கப்பட்டது. எதிர்கட்சி தலைவர் மு.கா ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். சசிகலாவின் தெரிவு நியாயமற்றது. அது ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்ட மன்ற குழு தiலைவராக அண்ணா திராவிட முன்னேறக் கழகத்தின் பொதுச் செயலாளராக நேற்று சசிகலா தெரிவு செய்யப்பட்டார். இந்த நிலையில் தமிழகத்தின் 12வது

அமெரிக்காவுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் நீதித்துறையே பொறுப்பேற்க வேண்டும் – டொனால்ட் ட்ரம்ப்

Posted by - February 6, 2017

அமெரிக்காவுக்கு ஏதேனும் தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு அமெரிக்க நீதித்துறையே பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஏழு நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு டொனால்ட் ட்ரம்ப் தடைவித்தார். எனினும் இது சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து அந்த நாட்டு நீதிமன்றங்கள் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தன. இந்த நிலையில், நீதித்துறையின் தீர்ப்பை தம்மால் நிராகரிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், குறித்த 7 நாடுகளைச் சேர்ந்தவர்களை கடுமையாக சோதனைகளுக்கு பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என

நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது யார் – வாசுதேவ நாணயக்கார விளக்குகிறார்.

Posted by - February 6, 2017

ஐக்கிய தேசிய கட்சியும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கவும் இணைந்து, நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எஹலியகொடயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனை தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியும் சந்திரிக்காவும், சர்வதேசத்தின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ளும் பொருட்டு நாட்டின் பெறுமதியான வளங்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படாது – அமரவீர

Posted by - February 6, 2017

அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படாது என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் இதனை குறிப்பிட்டார். ஆளும் அரசாங்கத்தில் பிளவு ஏற்படுவதாகவும், விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அவ்வாறு அமைச்சரவையில் மாற்றம் ஏற்படாது. சிலர் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என வெளிப்படையாகவே கோரிவருகின்றனர். எனினும் அது அவசியமற்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.