சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 27ஆம் திகதி 2 வணிக கப்பல்கள் மோதிக் கொண்டன.
இதில் டீசல் ஏற்றி வந்த கப்பல் பலத்த சேதமடைந்து.
அதில் இருந்து ஏராளமான டன் டீசல் கடலில் கொட்டியது.
மெரினா கடற்கரையை கடந்து திருவான்மியூர் கடற்கரை வரை பரவியுள்ள இந்த டீசல் படிமத்தை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வக்கீல் சுமீர் சோதி மூலம் அஸ்வினி குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில்
2 கப்பல்களின் அலட்சியத்தால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மீன், ஆமைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் பிராணிகளுக்கு பேரழிவும் ஏற்பட்டு இருக்கிறது.
இது தவிர கடற்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பெரும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி உள்ளது.
எனவே அந்த கப்பல்களின் உரிமையாளர்களிடம் இருந்து கூடுதல் நஷ்டஈடு பெறும் வரை சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமான 2 வர்த்தக கப்பல்களையும் பறிமுதல் செய்யவேண்டும். டீசல் படிமத்தை அகற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கண்காணிப்பதற்காக ஒரு குழுவை அமைக்கவேண்டும். சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை மதிப்பீடு செய்யவேண்டும்.
இந்த வழக்கில் ஒரு தரப்பினராக, மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மத்திய கப்பல் போக்குவரத்து துறை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், 2 கப்பல்களின் உரிமையாளர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

