முதல்-அமைச்சராக சசிகலா தேர்வு – பிரதமர் தலையிட சசிகலா புஷ்பா எம்.பி. கோரிக்கை

397 0

சட்டசபை அ.தி.மு.க. கட்சி தலைவராக (முதல்-அமைச்சர்) தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சசிகலாவுக்கு எந்த தகுதியும் கிடையாது என  சசிகலா புஷ்பா குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா புஷ்பா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது அதனை குறிப்பிட்டார்.

அவர் கட்சிப்பணியோ, மக்கள் பணியோ ஆற்றியது கிடையாது. ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருந்த போது அவர் சசிகலாவை ஏன் முதல்-அமைச்சராக அறிவிக்கவில்லை? அவர் நினைத்து இருந்தால் இவரை நியமித்து இருக்கலாமே? ஏன் பன்னீர்செல்வத்தை நியமித்தார்?

சசிகலா மீது வழக்கு இருக்கிறது. சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு நிலுவையில் இருக்கிறது. கோர்ட்டால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர் எப்படி முதல்-அமைச்சராக பதவி ஏற்க முடியும்?

எனவே இந்த பிரச்சினையில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, கவர்னர் மூலமாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என  சசிகலா புஷ்பா குறிப்பிட்டுள்ளார்.