தீர்வு முன்வைக்கப்படாவிடின் போராட்டத்தின் வடிவம் மாறும்-கேப்பாப்பிலவு மக்கள்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலத்திற்கு முன்னாள் தீர்வின்றி போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு இன்றையதினம் கலைஞர் கழகம், விளையாட்டு கழகம், மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இன்று ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர். 49 குடும்பங்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை இராணுவம் சுவீகரித்து நிலைகொண்டுள்ள நிலையில் பொதுமக்கள் தொடர்ச்சியான அகதி வாழக்கையை முன்னெடுத்துள்ளனர். இந்த

