புதிய சட்டம் வகுத்தும் பயனை பெற முடியாது!

521 0

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இலங்கையில் கடந்த வௌ்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் அதன் பயனைப் பெறுவதில் சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

இதன்படி, மட்டக்களப்பைச் சேர்ந்த பி.தீபா எனும் பெண் தனது காணாமல் போன கணவர் பற்றிய தகவல்களைப் பெற, குறித்த அலுவலகத்தின் உதவியை நாடியுள்ளார்.

எனினும் காலை 08.00 மணி முதல் காத்திருந்தும் தனக்கு எந்தப் பயனும் கிட்டவில்லை என, அவர் தி ஹிந்து ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

தீபா 2009ம் ஆண்டு முதல் தனது கணவரைத் தேடி வருகிறார் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, மேலும் 15 பெண்கள் மாவட்ட செயலகம், மாகாண மற்றும் மாவட்ட பொலிஸ் தலைமையகங்கள், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் திணைக்களம் போன்றவற்றில், தமது காணாமல் போன உறவுகள் குறித்த தகவல்களை கோரியுள்ளனர்.

எனினும் தமது அன்புக்குரியவர்கள் தொடர்பான எந்தத் தகவலையும் அவர்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது.