அலரி மாளிகையை படம்பிடித்த இந்தியப் பிரஜை விடுதலை

363 0

அலரி மாளிகையின் முன்னால் படம் பிடித்து கைது செய்யப்பட் இந்தியப் பிரஜை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

அலரி மாளிகையின் முன்னால் படம் பிடித்துகொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவர் நேற்று பகல் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் நாட்டில் சட்டரீதியாக தங்கியிருப்பதாகவும், சட்டவிரோத செயற்பாடுகள் எதனுடனும் அவர் தொடர்பில்லை என்பது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.