தகவல் வழங்கும் அலுவலகத்திற்குச் சென்ற பொது மக்களை பொலிஸார் தடுத்து வேறு ஒரு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம்(காணொளி)

Posted by - February 6, 2017

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுவிட்டதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்துள்ள போதிலும் அதற்கான அதிகாரிகளோ அல்லது ஆரம்பகட்ட நடவடிக்கைகளோ இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தகவல் வழங்கும் அலுவலகத்திற்குச் சென்ற பொது மக்களை பொலிஸார் தடுத்து வேறு ஒரு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவமும் இன்று இடம்பெற்றது. கடந்த 2011ஆம் ஆண்டு கட்டுநாயக்கவில் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது அதனைக் கலைப்பதற்காக பொலிஸார் நடத்திய தாக்குதலில் ரொஷேன் சானக்க என்ற இளைஞன்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய நிகழ்வு(காணொளி)

Posted by - February 6, 2017

விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய நிகழ்வு, இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில், மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வாக தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தொடர்ந்து தேகாரோக்கிய உடற்பயிற்சி  நிகழ்வுகள் ஆரம்பமாயின. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், உதவி அரசாங்க அதிபர் ரங்கநாதன்,  செயலக கணக்காளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் குறித்த தேகாரோக்கிய பயிற்சி நிகழ்வுகளில் கலந்து

இனந்தெரியாத நபர்களால் யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - February 6, 2017

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அருகில் இருந்த கடைகளின் கதவுகள் மீதும் வாளால் வெட்டப்பட்டுள்ளன. இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு வாளால் வெட்டி சேதப்படுத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப்பலகையினை சேதமாக்கியதுடன், மரத்திலான பெயர்ப்பலகையினையும் உடைத்துச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம்

ஜல்லிக்கட்டோடு ஓய்ந்துவிடுவோமா? – புகழேந்தி தங்கராஜ்

Posted by - February 6, 2017

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நிகழ்ச்சியில் சென்றவாரம் கலந்துகொண்டபோது பழைய (இளைய) நண்பர்கள் இருவரை மீண்டும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. இருவருமே 2009 ஜனவரி இறுதியில் கொளத்தூரில் முத்துக்குமார் திருவுடல் வைக்கப்பட்டிருந்த 3 நாளும் அகலாது அணுகாது அங்கேயே இருந்தவர்கள். (இருவரில் ஒருவர் இப்போது ஐ.டி. நிறுவனமொன்றில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.) அவர்கள் இருவருடனும் பேசியதிலிருந்து ஒரு உண்மையை உணரமுடிந்தது. 2009ல் இனப்படுகொலைக்கு எதிராகப் போராடிய இளைஞர்களின் உணர்வு மரத்துவிடவுமில்லை அப்போதிருந்த தி.மு.க. அரசின் துரோகத்தை அவர்கள் மறந்துவிடவுமில்லை.

21ம் நூற்றாண்டில் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பிரெஞ்சுப் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு

Posted by - February 6, 2017

21ம் நூற்றாண்டில் உலக மக்கள் தம் சுயநிர்ணய உரிமையை தீர்மானிப்பவர்களாக மாறும் நிலையில் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான சாத்தியப்பாடுகள், எதிர்நோக்கும் சிக்கல்கள் ஆகியவற்றை ஆராயும் கருத்தரங்கு பிரஞ்சு பாராளுமன்ற வளாகத்தில் பெப்பிரவரி 3ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அனைத்துலக ஈழத்தமிழரரவையின் அனுசரணையுடனும், பிரஞ்சுப் பாராளுமன்றத்தில் தமிழருக்கான ஆய்வு அமைப்பின் ஆதரவுடனும் பிரான்ஸ் தமிழீழ மக்களவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கு பிற்பகல் இரண்டு மணியிலிருந்து மாலை ஆறு மணிவரை நடைபெற்றது. பிரஞ்சுப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மனிதவுரிமைச்

ஜே.வி.பி ,ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான பொது வேட்பாளர் தரப்பில் இருந்துபெருந்தொகையான பணத்தை பெற்றுக்கொண்டது- சத்துர சேனாரத்ன

Posted by - February 6, 2017

மக்கள் விடுதலை முன்னணி கடந்த தேர்தல்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான பொது வேட்பாளர் தரப்பில் இருந்து பெருந்தொகையான பணத்தை பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன தெரிவித்துள்ளார். வாராந்த சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். அனுரகுமார திஸாநாயக்க, விஜித ஹேரத் ஆகியோருடன் நான் நேரடியான கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டேன். அவர்கள் என்னுடன் மாத்திரம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவில்லை. அரசாங்கத்தில் தற்போதுள்ள மோசடியான அமைச்சர்களுடனும் இவர்கள் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டனர்.

வடக்கில் மீண்டும் யுத்தமோ, குழப்பமோ ஏற்படுமானால் அது மஹிந்தவுடன் சுற்றித்திரியும் கூட்டணியின் சதிகளால் மட்டுமே முடியும் -சரத்பொன்சேகா

Posted by - February 6, 2017

வடக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சரியான முறையில் கையாளப்பட்டு வருகின்றது. இதை மீறி குழப்பங்கள் எதும் ஏற்படுமாயின் அது மஹிந்தவின் கூட்டணியால் மட்டுமே உருவாகும் என அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். திருகோணமலை துறைமுகம் தொடர்பில் சரத்பொன்சேகா முன்வைத்த கருத்துக்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கும்போது, திருகோணமலை துறைமுகத்தை விற்க வேண்டும் என்று ஒருபோதும் நான் கூறவில்லை. இலங்கை அரசுக்கும் அந்த நிலைப்பாடு

எமது பொதுமக்களுக்கு பாதுகாப்பான சேவை வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் -பா.டெனிஸ்வரன்

Posted by - February 6, 2017

உருவபொம்மை எரிப்பதனால் அநீதி நீதியாகிவிடாது. ஆகவே பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற அனைத்து தரப்பினரும் ஒற்றுமைப்பட்டு எமது பொதுமக்களுக்கு பாதுகாப்பான சேவை வழங்குவதற்கு முன்வாருங்கள். இல்லையேல் சட்டநடவடிக்கை எடுப்பதைத்தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை என வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைத்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் அவ்வறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, எமது பொதுமக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து சேவை வழங்குவதென்பது மிகுந்த சவாலுக்குட்பட்டதாகவே காணப்படுகின்றது. அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சீர்செய்வது

இலங்கையில் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாகுவது நிச்சயம்-உதய கம்மன்பில

Posted by - February 6, 2017

இலங்கையில் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாகுவது நிச்சயம், இதனால் மஹிந்தவுக்கு உயிரச்சுறுத்தல் ஏற்படும், அவருக்கு பாதுகாப்பை பெற்றுத்தருமாறு பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதை கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவது நிச்சயமே, இதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் படி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கும்

தற்போதைக்கு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாது- மஹிந்த அமரவீர

Posted by - February 6, 2017

தற்போதைக்கு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாது என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென சிலர் பகிரங்கமாக கோரி வருகின்ற போதிலும் தற்போதைக்கு அது அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் கட்சியின் அமைச்சர்களான தலதா அதுகோரல, எஸ்.பி. திஸாநாயக்க