தற்போதைக்கு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாது- மஹிந்த அமரவீர

341 0

தற்போதைக்கு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாது என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென சிலர் பகிரங்கமாக கோரி வருகின்ற போதிலும் தற்போதைக்கு அது அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆளும் கட்சியின் அமைச்சர்களான தலதா அதுகோரல, எஸ்.பி. திஸாநாயக்க போன்றவர்கள் அமைச்சரவை மாற்றம் குறித்து அண்மையில் ஊடகங்களில் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது