ஆய்வுகளின் பின்னர் காணிகளை மக்களிடம் விடுவிக்க நடவடிக்கை!
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப. டெனீஸ்வரனின் உருவபொம்மை எரியூட்டப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இனிவரும் காலங்களில் வடபகுதியிலுள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் உருவபொம்மைகளை எரியூட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டம் ஒன்றினை நடத்தவுள்ளதாக தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.
மிகவும் நுட்பமாக இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பாரிய மதுபான வர்த்தகம் ஒன்றை மத்திய மாகாண உதவி கலால் ஆணையர் அலுவலகம் கண்டுபிடித்துள்ளது.
துப்பாக்கிப்பிரயோகம் நடத்தும் முன் தொலைபேசி அழைப்பு ஒன்று தனக்கு வந்ததாகவும், அதில் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும் மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் சமீர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் இன்று முன்னெடுக்கப்பட்டது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடக்கோரியும், இலவச கல்வியை பாதுகாக்க கோரியும், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் இருந்து மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. கவனஈர்ப்பு பேரணியானது மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியுடாக மட்டக்களப்பு நகரினை அடைந்து, கோவிந்தன் வீதியூடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை
அமெரிக்க நாட்டின் மத்தியமேற்கு பகுதியில் உள்ள இலினாய்ஸ் மாநிலத்தில் நேற்றிரவு வானில் விண்கல் தென்பட்டது. பச்சை நிறத்தில் பிரகாசமாய் வானில் இருந்து வந்த விண்கல் மிச்சிகன் ஏரியில் வீழ்ந்ததை பலரும் பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.குறித்த விண்கல் வானில் இருந்து பூமியை நோக்கிவந்த காட்சி காவலர் ஒருவரது கார் கேமராவில் பதிவாகியிந்தது. குறித்த விண்கல் மணிக்கு 45,000 மைல் வேகத்தில் வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட இரு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் மடிக்கணினிகளை இழந்த இரு மாணவர்களுக்கு சிவன் ஃபவுண்டேசன் நிறுவனத்தினரால் மடிக்கணினிகள் வழங்கி வைக்கப்பட்டன.
சிறீலங்காவில் சீனாவின் நலன்களுக்கு எதிராக இந்தியா செயற்படுவதாக, சீன அரசின் நாளிதழான குளோபல் ரைம்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக் கட்டுப்பாடு காரணமாக நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அகில இலங்கை அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த இந்த அரிசி விலைக் கட்டுப்பாட்டினால் பல சிக்கல் நிலைமை உருவாகும் எனவும் அச்சங்கத்தின் தலைவர் பந்துல ஜயமான்ன கூறியுள்ளார். இதேவேளை, தாமதித்தாவது அரசாங்கம் விலைக் கட்டுப்பாட்டை நிர்ணயித்தமை, நுகர்வோருக்கு நன்மை பயக்கும் எனவும் அகில இலங்கை
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் நெடியவணை இன்டர்போலிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே அரசாங்கம் மறுப்பு வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியதன் பின்ணியில் நெடியவண் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெடியவணை இன்டர்போல் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே இணங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நோர்வேயில் புலிகளின் தலைவராக நெடியவண் செயற்பட்டு வருவதாகவும், அவருக்கு எதிராக இன்டர்போல் சிகப்பு எச்சரிக்கை