இணையத்தின் மூலமாக மதுபான வர்த்தகம்!

251 0

மிகவும் நுட்பமாக இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பாரிய மதுபான வர்த்தகம் ஒன்றை மத்திய மாகாண உதவி கலால் ஆணையர் அலுவலகம் கண்டுபிடித்துள்ளது.

இணையத்தளத்தின் ஊடாக அறிவித்தல் பதிவு செய்து வெளிநாட்டு போதை மதுபானங்களை குறைந்த விலையில் விற்பனை செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கலால் திணைக்களத்தின் ஊடாக நபர் ஒருவரை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டின் போது கண்டி பிரதேசத்தில் வெளிநாட்டு மதுபானங்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய இந்த வர்த்தகம் தொடர்பில் பல தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து கொழும்பு பிரதான மதுபான வர்த்தக நிலையத்திற்கு விற்பனை செய்யப்பட்ட பற்றுச்சீட்டும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.உரிய வரிப்பணம் செலுத்தாமல் இந்த வெளிநாட்டு மதுபானங்களை இலங்கைக்கு கொண்டுவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.