உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீள பெறல்

Posted by - February 8, 2017

நகர அபிவிருத்தி சபையால் 1985 ஆண்டு உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் சில அதிகாரங்கள் மீள பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜகத் முனசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அதிகாரங்கள் இந்த மாதம் முதலாம் திகதி முதல் மீள பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து அபிவிருத்தி பணிகளுக்கான அடிப்படை திட்டமிடலை உருவாக்குவது, விண்ணப்பங்களை பொறுப்பேற்றல், கட்டணங்களை ஒப்புதல் செய்தல், அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொடுத்தல் முதலான அதிகாரங்கள் மீளப் பெற்றக்கொள்ப்பட்டுள்ளன.

சவூதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் தினம் கொண்டாட்டம்

Posted by - February 8, 2017

பழமைவாத நம்பிக்கைகளை கடைப்பிடிக்கும் நாடான சவூதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் மன்னர் குடும்பத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒபாமாவின் நடவடிக்கையே ஐ.எஸ் உருவாக காரணம் – ஈரான் தலைவர்

Posted by - February 8, 2017

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் தவறான நடவடிக்கையே, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உருவாக காரணமாக இருந்ததாக ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி குற்றம் சாட்டியுள்ளார்.

தம்புள்ளை கிரிக்கட் மைதான பணியாளர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது

Posted by - February 8, 2017

தம்புள்ளை சர்வதேச கிரிக்கட் மைதான பணியாளர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. மைதானத்தின் பார்வையாளர்கள் அரங்கின் கூறையின் மீதேறி இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் அவர்கள் நேற்று முற்பகல் முதல் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 11 பணியாளர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 10 வருடங்களாக தாம் பணியாற்றுகின்றபோதும்இ தமது சேவையை நிர்ந்தரமானதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் முன்ரவவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தமது கோரிக்கை தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய

18 வயதில் பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றும் இளைஞர்

Posted by - February 8, 2017

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் 18 வயதான மார்ச் டியான் போடிஹார்ட்ஜோ என்ற இளைஞர், இணைப் பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார்.

பாகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 6.3 என சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Posted by - February 8, 2017

பாகிஸ்தானின் கடற்கரைப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.3 என சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

போதையில் நிகழ்ந்த பயங்கர விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 16 பேர் பலி

Posted by - February 8, 2017

குடிபோதையில் அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்திய சாரதியால், 14 பாடசாலை மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் ஹொண்டூரஸில் இடம்பெற்றுள்ளது. ஹொண்டூரஸின் தலைநகரான டெக்குசிகல்பாவிலுள்ள, அதிவேக நெடுஞ்சாலையில் குடிபோதையுடன் அதிக வெகத்தில் பாரவூர்தியை செலுத்திய சாரதி, பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பேரூந்து மீது மோதியுள்ளார். குறித்த விபத்து நிகழ்ந்தப்போது பேரூந்தில் மொத்தமாக 60 பேர் பயணித்துள்ளார்கள். விபத்து இடம்பெற்றதை தொடர்ந்து சம்பவ இடத்திலேயே 14 பேர் இறந்துள்ளதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும்

போதைப்பொருள் கடத்தல்: நேபாளத்தில் இந்தியர் கைது

Posted by - February 8, 2017

நேபாளத்தில் இந்திய எல்லையையொட்டி பிர்குஞ்ச் என்ற இடத்தில் போதைபொருள் கடத்தியதாக இந்தியர் ஒருவரை நேபாள போலீசார் கைது செய்தனர்.

பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னால் திமுக சதி: தம்பிதுரை குற்றச்சாட்டு

Posted by - February 8, 2017

முதல்வர் பன்னீர் செல்வத்தின் பேட்டிக்கு பின்னால் திமுக உள்ளது என்று அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளார்.