போதையில் நிகழ்ந்த பயங்கர விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 16 பேர் பலி

255 0

குடிபோதையில் அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்திய சாரதியால், 14 பாடசாலை மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் ஹொண்டூரஸில் இடம்பெற்றுள்ளது.

ஹொண்டூரஸின் தலைநகரான டெக்குசிகல்பாவிலுள்ள, அதிவேக நெடுஞ்சாலையில் குடிபோதையுடன் அதிக வெகத்தில் பாரவூர்தியை செலுத்திய சாரதி, பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பேரூந்து மீது மோதியுள்ளார்.

குறித்த விபத்து நிகழ்ந்தப்போது பேரூந்தில் மொத்தமாக 60 பேர் பயணித்துள்ளார்கள்.

விபத்து இடம்பெற்றதை தொடர்ந்து சம்பவ இடத்திலேயே 14 பேர் இறந்துள்ளதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் 34 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்களை ஏற்றிய நிலையில் மிகவும் வேகமாக செலுத்தப்பட்ட குறித்த பாரவூர்தியின் சாரதி, ஒரு வகை போதை பானத்தை அருந்தியிருந்ததால், பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து, பாடசாலை பேரூந்து மீது மோதியுள்ளது.

மேலும் குறித்த விபத்தினால் 23 வயதான பேரூந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தப்பிச் செல்ல முயன்ற பாரவூர்தியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டள்ளார்.