நகர அபிவிருத்தி சபையால் 1985 ஆண்டு உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் சில அதிகாரங்கள் மீள பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜகத் முனசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த அதிகாரங்கள் இந்த மாதம் முதலாம் திகதி முதல் மீள பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய அனைத்து அபிவிருத்தி பணிகளுக்கான அடிப்படை திட்டமிடலை உருவாக்குவது, விண்ணப்பங்களை பொறுப்பேற்றல், கட்டணங்களை ஒப்புதல் செய்தல், அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொடுத்தல் முதலான அதிகாரங்கள் மீளப் பெற்றக்கொள்ப்பட்டுள்ளன.
உள்ளுராட்சி மன்றங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் மிகவும் பழமையான முறையாக உள்ளதால், திட்டங்ளுக்கு அனுமதி வழங்க அதிக காலம் எடுப்பதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜகத் முனசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு வெளியிடுவதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.

