தம்புள்ளை கிரிக்கட் மைதான பணியாளர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது

418 0

தம்புள்ளை சர்வதேச கிரிக்கட் மைதான பணியாளர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

மைதானத்தின் பார்வையாளர்கள் அரங்கின் கூறையின் மீதேறி இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் அவர்கள் நேற்று முற்பகல் முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 11 பணியாளர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

10 வருடங்களாக தாம் பணியாற்றுகின்றபோதும்இ தமது சேவையை நிர்ந்தரமானதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் முன்ரவவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தமது கோரிக்கை தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை வழங்க சமம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வராததால், இன்று போராட்டத்தை முன்னெடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பணியாளர்களை நிர்ந்தரமாக்குவதற்கான ஆலோசனைகளை இலங்கை கிரிக்கட் நிறுவனத்துக்கு தாம் வழங்கியுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.