ஆப்கானிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் பலி

343 0

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதி ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 12 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் வளாகத்தில், வாகனங்கள் நிற்கும் இடத்தின் அருகே நீதிமன்ற ஊழியர்கள் கூடி இருந்தனர். அப்போது, சக்தி வாய்ந்த குண்டுகளை உடலில் கட்டி எடுத்து வந்துள்ள தீவிரவாதி ஒருவன், அக்குண்டுகளை வெடிக்க வைத்துள்ளான்.
இந்த திடீர் தாக்குதலில், சம்பவ இடத்திலேயே 12 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும், 12 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.