நாட்டின் பிரச்சினைகளை மறக்க அரசாங்கம் முயற்சி – மஹிந்த

Posted by - February 8, 2017

நாட்டின் பிரச்சினைகளை மறப்பதற்காகவே அரசாங்கம் அனைத்தையும் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்காமல் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரை அண்மையில் சந்தித்ததாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கு – மீளாய்வு மனு தள்ளுபடி

Posted by - February 8, 2017

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் குறித்த தீர்ப்பை, மீளாய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை இந்திய உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகியோர் சிறையில் உள்ளனர். அவர்களை தமிழக அரசாங்கம் முன்னதாக விடுவித்திருந்த நிலையில், மத்திய அரசாங்கத்தின் எதிர்ப்பை அடுத்து இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனையடுத்து, தமிழக அரசாங்கம்

அதிபர்களின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு-அகில விராஜ் காரியவசம்

Posted by - February 8, 2017

அரச பாடசாலை அதிபர்களின் மாதாந்த கொடுப்பனவு 6 ஆயிரத்து 500 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவிதுள்ளார். இதற்கமைய அதிபர்களின் கொடுப்பனவுகள் 2500 ரூபாவில் இருந்த 6 ஆயிரத்து 500 ருபா வரை உயர்வடைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்தா

கருணா அம்மானின் போலி ராஜதந்திர கடவுச்சீட்டு,விசாரணைகள் ஆரம்பம்

Posted by - February 8, 2017

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானின் போலி ராஜதந்திர கடவுச்சீட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போலிக் கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி பிரித்தானியாவிற்கு பயணம் செய்தமை குறித்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் குறித்து கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்கவிடம், இரகசிய பொலிஸார் தகவல்களை சமர்ப்பித்துள்ளனர். போலிக் கடவுச்சீட்டு ஊடாக கருணா நாட்டின் குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறினாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. துஸ்மந்த குணவர்தன என்ற பெயரில்

வடக்கில் பயங்கரவாதம் தலைதூக்கும் ஆபத்து உள்ளமையால், காணாமல் போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது-ஜீ.எல்.பீரிஸ்

Posted by - February 8, 2017

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருக்க மஹிந்த ராஜபக்ஸ பல வழிமுறைகளை கொண்டுவந்திருந்தார். எனினும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மூலம் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினரின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருப்பதற்கு 16 அமைப்புக்களுக்கு தடை விதித்ததுடன், 424 பேருக்கும் முன்னாள்

மகிந்த ராஜபக்சவை கொலை குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்றினேன்-சரத் என் சில்வா

Posted by - February 8, 2017

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை குற்றச்சாட்டில் இருந்து தான் காப்பாற்றியதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட எழுதிய “எனது வாக்குமூலம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் நீதியரசர் இதனை கூறியுள்ளார். அன்றைய காலத்தில் நீதவான்கள் நீதிமன்ற மனநிலையில் இருந்து செயற்பட்டனர். தற்போது அவர்கள் நீதிமன்ற மனநிலையில் இருந்து செயற்படுவதில்லை. மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக இரண்டு கொலை குற்றச்சாட்டுக்களும்,

தற்போதைய அரசாங்கம் சீனாவுடன் முன்னெடுத்து வரும் தொடர்புகள் குறித்து இந்தியா அமைதியாக இருந்து வருகிறது-நாமல் ராஜபக்ச

Posted by - February 8, 2017

ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவுடன் இருந்த தொடர்புகள் குறித்து இந்தியா தவறான புரிதலுடன் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய அரசாங்கம் சீனாவுடன் முன்னெடுத்து வரும் தொடர்புகள் குறித்து இந்தியா அமைதியாக இருந்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் நாமல் இதனை கூறியுள்ளார். தமது தந்தையின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு சொந்தமான நிலத்தையும் நீர் நிலைகளையும் வேறு ஒரு நாட்டுக்கு எதிராக பயன்படுத்த இடமளிப்பதில்லை என்ற

டொனால்ட் ட்ராம்பை விடவும் தமது தந்தை செல்வந்தர்-நாமல் ராஜபக்ஷ

Posted by - February 8, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பை விடவும் தமது தந்தை செல்வந்தர் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமது தந்தை டொனால்ட் ட்ராம்பை விடவும் செல்வந்தர் என இந்த அரசாங்கம் கூறி வருவதாகவும், தந்தையின் கணக்கில் 18 பில்லியன் டொலர்கள் காணப்படுவதாக கூறி வந்த அரசாங்கம் தற்போது அந்த தொகையை ஒரு பில்லியனாக குறைத்துக் கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த

பொதுமக்களின் உரிமைகள் போராட்டங்களின் மூலம் பாதிக்கப்படுகின்றன-சாகல ரட்நாயக்க

Posted by - February 8, 2017

போராட்டங்களின் மூலம் பொதுமக்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். சில தரப்பினர் நடத்தும் போராட்டங்களினால் பொதுமக்கள் உரிமைகள் மீறப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் சட்டம் ஒழுங்கு மதிக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார். அரசாங்கம் சட்டம் ஒழுங்கையும் நல்லாட்சியையும் நிலைநாட்டுவதில் அதிக கரிசனை கொண்டுள்ளதாக பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார். போராட்டங்களை நடாத்துவதற்கு தனியான இடமொன்று ஒதுக்கப்பட வேண்டுமெனவும் போராட்டங்கள் நடத்தப்படுவதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் பாராளுமன்ற

முதல்முறையாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்டத் தொகுதி ஏற்பு

Posted by - February 8, 2017

இலங்கையில் முதல்முறைாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சட்டத் தொகுதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.