ராஜீவ் கொலை வழக்கு – மீளாய்வு மனு தள்ளுபடி

340 0

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் குறித்த தீர்ப்பை, மீளாய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை இந்திய உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகியோர் சிறையில் உள்ளனர்.

அவர்களை தமிழக அரசாங்கம் முன்னதாக விடுவித்திருந்த நிலையில், மத்திய அரசாங்கத்தின் எதிர்ப்பை அடுத்து இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதனையடுத்து, தமிழக அரசாங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மீளாய்வு மனு ஒன்று கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில் 7 பேரை விடுதலை செய்ய வேண்டிய விவகாரத்தில் மத்திய அரசாங்கத்தின் ஆலோசனையை பெற வேண்டுமே தவிர, அனுமதியை பெற தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ள இந்திய உயர் நீதிமன்றம், மத்திய விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசாங்கத்துக்கு இல்லை என்று அறிவித்துள்ளது.

இதன்படி குறித்த 7 பேரும் தொடர்ந்தும் சிறையில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.