இரண்டு தரப்புக்கும் நியாயமான தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி ….

Posted by - February 9, 2017

நாட்டின் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு தரப்புக்கும் நியாயமான தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நுவரெலியா அக்கரபத்தனை வூட்வில் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது தோட்ட கிராமத்தை தொழிலாளர்களுக்கு கையளிக்கும் நிகழ்வின் பின்னர் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் இன்று நடந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மாத்திரமல்லாது சுகாதாரம் மற்றும் தோட்டங்களை சேர்ந்த பாடசாலை

நாமலின் சகாக்கள் இருவருக்கு இன்டர்போல் பிடியாணை

Posted by - February 9, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் தொடர்புடைய இருவரை கைது செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் இன்று இன்டர்போல் பிடியாணை பிறப்பித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது ஹெலோகோப் நிறுவனம் கொள்வனவு செய்யப்பட்டதில், மேற்கொள்ளப்பட்ட பணம் தூய்மையாக்கல் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ உட்பட ஐவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்படாமல் வெளிநாட்டில் உள்ள இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் இன்று இன்டர்போல் பிடியாணை பிறப்பித்துள்ளார். இந்திக பிரபாத் கருணாஜீவ

அரசியலமைப்பு மூலம் நாட்டை பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி

Posted by - February 9, 2017

அரசியலமைப்பு சூழ்ச்சி மூலம் நாட்டை பிரித்து வேறாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். போர் மூலம் இரண்டாக பிளவுப்படவிருந்த நாட்டை அரசியலமைப்புத் திருத்தம் மூலம் பிரிக்க இடமளிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மீகொடை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அதேபோல் கடன் மற்றும் முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் போர்வையில் நாட்டை வெளிநாட்டவர்களிடம் காட்டிக்கொடுக்க இடமளிக்க முடியாது என்றும்

மைத்திரிபால சிறிசேன தலைசாய்க்க வேண்டும் என கோரும் அவசர பிரேரனை…….

Posted by - February 9, 2017

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் தொடர் போராட்டத்தில் குதித்துள்ள மக்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைசாய்க்க வேண்டும் என கோரும் அவசர பிரேரனை வடக்கு மாகாணசபையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. வடமாகசபை ஆளும்கட்சி உறுப்பினர் து.ரவிகரன் சமர்பித்துள்ள அவசர பிரேரனை மாகாணசபையின் உப ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்ட நிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பிரேனையில் மேலும் தெரியவருவதாவது, கேப்பாப்புலவு மதிரகிராமத்தில் தற்காலிகமாக குடியேறிய மக்கள் தங்களின் பூர்வீக கிராமங்களான கேப்பாப்புலவு குடியிருப்பு மற்றும் பிலக்குடியிருப்பு பகுதியில் குடியமர்த்துமாறு பலதடவை

இவ்வாண்டிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது – கம்மன்பில

Posted by - February 9, 2017

இந்த ஆண்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்தும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயம் தமக்கு புலனானது என அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் இடையில் ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்

போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி எடுக்கவில்லை- மங்கள சமரவீர

Posted by - February 9, 2017

போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி எடுக்கவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட உள்ளக பொறிமுறைகள் தாமத நிலை காணப்படுகிறது.  இதற்கு மேலதிக கால அவகாசம் தேவைப்படுகிறது.  இந்த அவகாசத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மாநாட்டில் வைத்து அரசாங்கம் கோரவுள்ளது.  இது போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைப்பதற்கான முயற்சி இல்லை என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பெருந்தொகையான புகையிலைத்தூள் மூடைகள் மீட்பு

Posted by - February 9, 2017

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியில் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 264 புகையிலைத்தூள் மூடைகளை மதுவரித் திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

குடு ரொஷான் கொலைச் சந்தேகநபர்கள் மூன்று பேர் விளக்கமறியலில்

Posted by - February 9, 2017

வனாத்தமுல்ல பிரதேசத்தின் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு ரொஷான் எனப்படும் சாமர சந்தருவன் என்பரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

திருகோணமலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இளைஞரொருவரை காணவில்லை

Posted by - February 9, 2017

திருகோணமலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இளைஞரொருவர் காணாமல் போயுள்ளார்.மூதூர் , ஹபீப் நகரைச் சேர்ந்த 22 வயதான வஹாப்தீன் பஹீர் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். நேற்று காலை மீன் பிடிக்கச் சென்றுள்ள அவர் மாலை வரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் இன்று காலை இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த நபரைத் தேடும் பணிகள் இன்று தொடங்குமென தெரிவிக்கப்படுகின்றது.