முல்லைத்தீவு கேப்பாப்புலவில் தொடர் போராட்டத்தில் குதித்துள்ள மக்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைசாய்க்க வேண்டும் என கோரும் அவசர பிரேரனை வடக்கு மாகாணசபையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகசபை ஆளும்கட்சி உறுப்பினர் து.ரவிகரன் சமர்பித்துள்ள அவசர பிரேரனை மாகாணசபையின் உப ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்ட நிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பிரேனையில் மேலும் தெரியவருவதாவது,
கேப்பாப்புலவு மதிரகிராமத்தில் தற்காலிகமாக குடியேறிய மக்கள் தங்களின் பூர்வீக கிராமங்களான கேப்பாப்புலவு குடியிருப்பு மற்றும் பிலக்குடியிருப்பு பகுதியில் குடியமர்த்துமாறு பலதடவை பல வடிவங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால் இன்று வரை அவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.
கடநத் 31ம் திகதி தொடக்கம் பிலக்குடியிருப்பு காணிகளை விடுவிப்பு தொடர்பில் விமாணப்படை முகாம் எதிரில் இரவு பாகலாக கவண ஈர்ப்பு போராட்டத்தை மக்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று உரிய தீர்வை அரச தலைவர்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அந்த பிரேரனையில் மேலும் கோரப்பட்டுள்ளது.

