கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - February 10, 2017

முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவு மக்கள் இராணுவம் சுவீகரித்து வைத்திருக்கும் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி 11 ஆவது நாளாக முற்றுகைப்போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் அம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.

தமிழ் மக்களுக்கு புதிய தலைமை அவசியம்-சுரேஸ் பிரேமச்சந்திரன் (காணொளி)

Posted by - February 10, 2017

நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுப்பட்டு எல்லாவற்றையும் இழந்து இன்றும் கூட போராடிக் கொண்டு இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், இன்றுடன் பத்து நாட்களுக்கும் மேலாக கேப்பாப்புலவு மக்கள் தங்களது காணிகளை விடுவிப்பதற்காக போராடிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் எங்களுடைய தலைமைகள் எல்லாம் எங்கே போனது. எனவே அவர்களுக்கு

அழிவின் உச்சம்தான் தென் தமிழ் தேச மண் – கஜேந்திரகுமார் (காணொளி)

Posted by - February 10, 2017

எழுக தமிழ் பேரணியில் உரையாற்றிய கஜேந்திரகுமார்  பொன்னம்பலம்…. இன்றைக்கு இந்த அரசு உலகிற்கு கூறுவது என்னவென்றால் கொண்டுவரப்படும் புதிய அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் விருப்பத்துடன்தான் கொண்டு வரப்படுகின்றது. இந்த செய்தியை அரசு அண்மையில் ஐ.நாவில் இடம்பெற்ற கூட்டத்தில் 64 நாடுகளை சந்தித்து கூறி வந்துள்ளது. ஆனால் இது அரசியல் மோசடி என்பதை உலகிற்கு சொல்வதற்காகதான் இன்று ஒன்று கூடியுள்ளோம் என எழுக தமிழ் பேரணி ஏற்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.வரப்போவது ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பு என அனைவருக்கும்

அரிசி வகைகளை அதிக விலைக்கு விற்கும் வர்த்தகர்கள் சுற்றிவளைப்பு

Posted by - February 10, 2017

கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாக அரிசி வகைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

ஐ.நா. உணவு திட்ட பணிப்பாளர் இன்று வருகிறார்

Posted by - February 10, 2017

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தின் பணிப்பாளர் இன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸவின் பிரஜாவுரிமைகளை ரத்து செய்வதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை

Posted by - February 10, 2017

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் பிரஜாவுரிமைகளை ரத்து செய்வதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை என பெருந்தெருக்கள் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

சட்டத்தரணி ஒருவருக்கு மேல்நீதிமன்ற நீதிபதியாக உடனடி நியமனம்

Posted by - February 10, 2017

அரசியலமைப்பு மற்றும் நீதிமன்ற சேவை சம்பிரதாயத்திற்கு புறம்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சட்டத்தரணி ஒருவருக்கு மேல்நீதிமன்ற நீதிபதியாக உடனடி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படும் தமிழ் மக்கள் -விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - February 10, 2017

எழுக தமிழ் பேரணியில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் பெரும்பான்மை அரசியல்வாதிகள் தாங்கள் கூறும் செயற்பாட்டினை நாங்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றே கருதுகின்றார்கள். என வடக்கு முதல்வர் க.வி விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறு அவர்களின் விருப்பம் தொடருமானால் நாம் ஒருகாலத்தில் பயங்கரவாதிகள் என்று கூறி முத்திரை குத்தப்படும் சூழ்நிலைக்கு செல்லவேண்டிய சூழல் ஏற்படும். தற்போதும் எங்களை அப்படிதான் சிலர் நோக்குகின்றனர். அரசாங்கத்தினை எதிர்ப்பவர்கள் எல்லாம் குற்றவாளிகள், பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் எழுக தமிழ் பேரணி இன்று ஆரம்பமானது(காணொளி)

Posted by - February 10, 2017

கிழக்கு மாகாணத்தில் இன்று ஆரம்பான எழுக தமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கலந்துகொண்டுள்ளார். சற்றுமுன்னர் ஆரம்பமான எழுக தமிழ் பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், இணைத்தலைவர் ரி.வசந்தராஜா உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர்