ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தின் பணிப்பாளர் இன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பொன்றுக்கு இணங்க உலக உணவு திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எதரின் கசின் இலங்கை வரவுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் போசனை தொடர்பான தேசிய மூலோபாய கலந்தாலோசனைகளை வௌிப்படுத்தல் நிகழ்வில் கலந்து கொள்வதே அவரது பயணத்தின் நோக்கமாகும்.
அரச சார்ப்பற்ற அமைப்புகள், குடியியல் சமூகம், தனியார் பிரிவு மற்றும் ஐக்கிய நாடுகளின் பிரதி நிறுவனங்கள் ஒன்றிணைந்து தயாரித்த குறித்த வேலைத்திட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தலைமையிலான தெற்காசிய கொள்ளை மற்றும் ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கைக்கு அமைய முன்னெடுக்கப்படுகிறது.
வறுமையற்ற நாட்டை உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நிலையான அபிவிருத்தியை நோக்கிய இரண்டாவது கட்ட நடவடிக்கை உலக உணவு திட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

