நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாளை புத்தளம் விஜயம்!

340 0

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாளை (11) புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அமுலாக்கல் தொடர்பாக அரச அலுவலர்களை தௌிவுபடுத்தல் மற்றும் பிரதேச வர்த்தகர்கள், மீனவர்கள், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுதல் மற்றும் அவற்றுக்கு துரித தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த விஜயம் அமையவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நாளை முற்பகல் 11.00 மணியளவில் சிலாபம், மாதம்பை கூட்டுறவு வைபவ மண்டபத்தில் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நாளை முற்பகல் சிலாபம் ஸ்ரீவிஜயாராம விகாரை, முன்னேச்சரம் கோவில் மற்றும் பேராயரின் இல்லத்திற்கும் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.