நாளைக்குள் முடிவு எடுக்கவில்லை எனில் ஆளுநருக்கு எதிராக வழக்கு – சுப்ரமணியன் சுவாமி

Posted by - February 12, 2017

தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழகத்தில் ஆளும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் தரப்பில் எம்எல்ஏக்கள் பலரும் சசிகலாவை முதல்வராக பொறுபேற்க வேண்டும் என்ற கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சசிகலா முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என ஒரு பிரவு எம்எல்ஏக்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் பன்னீர்செல்வத்திற்கு ஆதராக சில எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவை தெரிவித்து

இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Posted by - February 12, 2017

சிறீலங்காவை மையமாகக் கொண்ட இந்தியக் கடற்பரப்பில் சீனா தனது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்கா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை! – ஏப்ரல் 26 வரை காலக்கெடு

Posted by - February 12, 2017

இலங்கை அரசாங்கத்துக்கு வரும் ஏப்ரல் 26ஆம் திகதி வரை ஐரோப்பிய ஒன்றியம் காலக்கெடு விதித்துள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு 11 நிபந்தனைகள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஜப்பான் கடலில் வீழ்ந்த வடகொரிய ஏவுகணை

Posted by - February 12, 2017

நெடுந்தூர ஏவுகணை ஒன்றினை வட கொரியா ஜப்பான் கடற்பிராந்தியத்தை நோக்கி ஏவியுள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. டொனால்ட் ட்ரம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி எற்றதன் பின்னர் வடகொரியாவினால் மேற்கொள்ளப்பட்ட முதல் ஏவுகணை இதுவென குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 500 கிலோ மீட்டர் பயணித்த இந்த ஏவுகணை ஜப்பான் கடற்பிராந்தியத்தில் வீழ்ந்துள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரிய தீபகற்பத்தின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள பங்கயோன் வாநூர்தி தளத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி

உணவு தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ள போவதாக சசிகலா எச்சரிக்கை

Posted by - February 12, 2017

தமிழக பொறுப்பு ஆளுநர் தம்மை அரசாங்கம் அமைக்க இடம்தரவில்லை என்றால் உணவு தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ள போவதாக சசிகலா நடராஜன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ், சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரையில் ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் ஆட்சி அமைப்பதற்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது. இதன்பொருட்டு கையெப்பம் பெற்றுக்கொள்ளப்பட்ட 127 சட்டசபை உறுப்பினர்கள் சென்னையில் இருந்து 80 மிலோமீட்டர் தொலைவில் உள்ள கூவத்தூரில்,

சர்வஜன வாக்கெடுப்பை நடத்த இணங்கவில்லை

Posted by - February 12, 2017

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை இணக்கத்தை வெளியிடவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

விளையாட்டரங்க பணியாளர்களின் போராட்டம் நிறைவு

Posted by - February 12, 2017

கடந்த 6 தினங்களுக்கு முன்னர் உணவு தரப்பு போராட்டத்தை ஆரம்பித்த தம்புள்ள சர்வதேச விளையாட்டு அரங்கின் ஊழியர்கள் இன்று முற்பகல், தமது போராட்டத்தை கைவிட்டுள்ளனர். விரைவில் வேறு தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கிலேயே அந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள தம்மை ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் நிரந்தர சேவையாளர்களாக இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி கடந்த 6ஆம் திகதி 11 பணியாளர்கள் இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். இவர்கள் தம்புள்ள விளையாட்டரங்கில் உள்ள கூரைமேல் ஏறிய

புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை கோரும் மைத்திரிபால சிறிசேன

Posted by - February 12, 2017

புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை அடுத்த வாரம் தன்னிடம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்புச் சட்டவாக்க சபையின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவுக்கு அறிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் அவுஸ்திரேலியா செல்கிறார்.

Posted by - February 12, 2017

நான்கு நாள் உத்தியோகபூர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியா செல்லவுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய என்பவற்றிற்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 70 வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டே இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் பிரதமர் உள்ளிட்ட குழுவினர், பிரதமர் மல்கம் டேன்புல் மற்றும் அமைச்சர்களுடன் இருதரப்பு உறவு குறித்து கலந்துரையாடவுள்ளனர். இதுதவிர, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையில்

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு முரண்பட்டுள்ளது

Posted by - February 12, 2017

அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாடு தற்போது ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் காணப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.