ஜப்பான் கடலில் வீழ்ந்த வடகொரிய ஏவுகணை

292 0

நெடுந்தூர ஏவுகணை ஒன்றினை வட கொரியா ஜப்பான் கடற்பிராந்தியத்தை நோக்கி ஏவியுள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

டொனால்ட் ட்ரம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி எற்றதன் பின்னர் வடகொரியாவினால் மேற்கொள்ளப்பட்ட முதல் ஏவுகணை இதுவென குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 500 கிலோ மீட்டர் பயணித்த இந்த ஏவுகணை ஜப்பான் கடற்பிராந்தியத்தில் வீழ்ந்துள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரிய தீபகற்பத்தின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள பங்கயோன் வாநூர்தி தளத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த வருடம் வடகொரியா பல நெடுந்தூர ஏவுகணைகளை ஏவியுள்ளன.

பிராந்திய நாடுகள் இதற்கு எதிர்ப்பினை தெரிவித்து வந்த போதிலும், வட கொரியா தொடர்ந்தும் ஏவுகணைகளை ஏவி வந்துள்ளன.

வடகொரியாவின் இன்றைய நடவடிக்கை குறித்து டொனால்ட் ட்ரம்பின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.