இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

321 0

சிறீலங்காவை மையமாகக் கொண்ட இந்தியக் கடற்பரப்பில் சீனா தனது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்கா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டுமுதல் அப்போதைய ஆட்சியாளராக இருந்த மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் சீனா இராணுவ மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது.

இந்நிலையில் சீனாவின் கடற்சார் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதை இந்தியாவிற்கு எச்சரிக்கும் வகையிலான கடிதம் ஒன்றை அமெரிக்காவின் வெளியுறவு துறை நிபுணரும், ஆசிய வேலைத்திட்டத்தின் தலைவருமான ஜெப்.எம்.சிமித் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

சிறீலங்காவின் பெரும்பான்மையான துறைமுகங்கள் சீனாவுக்கு உரித்துடையதாக இருப்பதோடு, சீனாவானது தென்சீனக் டகலில் தனது ஆதிகத்தை நிலைநாட்டியதைப்போல, தற்போது இந்தியப் பெருங்கடலிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றது.

குறித்த நிகழ்வானது தெற்காசிய வர்த்தக நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு சவால்களை ஏற்படுத்தும் அதேவேளை இந்திய எல்லை பகுதியில் சிறீலங்காவை காரணமாக வைத்து அடிக்கடி சீனாவின் நீர்முழ்கி கப்பல்கள் சிறீலங்காவில் நிறுத்தப்படுவது இந்தியாவின் பாதுகாப்பிற்கு சவாலை ஏற்படுத்தும்.

சிறீலங்காவுக்கு 75 வீதமான கப்பற்போக்குவரத்தை மேற்கொள்வது இந்தியாவாகும். இந்நிலையில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்வது பாதுகாப்பான விடயமல்ல.

சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கொழும்பு துறைமுகத்தில் வெளிநாட்டு பாதுகாப்பு தரப்புகள் நடவடிக்கைகள் எதுவும் நடக்குமென்றால், அது தொடர்பாக அயல் நாடுகளுக்கு அறிவிக்கவேண்டுமென வலியுறுத்தியிருந்தார். ஆனால் இச்சந்திப்பு நடைபெற்று சில நாட்களிலே சீன நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தங்கிச் சென்றது. எனவே இது தொடர்பாக இந்தியா எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமென அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தக் கடிதத்தால் இந்திய – சிறீலங்கா உறவில் விரிசல் ஏற்படக்கூடுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.