கடந்த 6 தினங்களுக்கு முன்னர் உணவு தரப்பு போராட்டத்தை ஆரம்பித்த தம்புள்ள சர்வதேச விளையாட்டு அரங்கின் ஊழியர்கள் இன்று முற்பகல், தமது போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
விரைவில் வேறு தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கிலேயே அந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள தம்மை ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் நிரந்தர சேவையாளர்களாக இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி கடந்த 6ஆம் திகதி 11 பணியாளர்கள் இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இவர்கள் தம்புள்ள விளையாட்டரங்கில் உள்ள கூரைமேல் ஏறிய நிலையிலேயே இந்த போராட்டத்தை நடத்தினர்.
இதனிடையே இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அதே கோரிக்கையை முன்வைத்தும், கொழும்பு ஆர்.பிரேமதாச, சூரியவௌ ராஜபக்ச உட்பட்ட ஐந்து விளையாட்டு மைதான ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டமும் கைவிடப்பட்டுள்ளது.
எனினும், கண்டி பல்லேகல விளையாட்டு மைதான ஊழியிர்கள் தமது போராட்டத்தை தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

