சுமந்திரன் கொலை முயற்சி – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்யச்சதித்திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் எதிர்வரும் 27ம் திகதி வரைக்கும் விளக்கமறியிலில் வைக்குமாறும் அதேவேளை இரண்டாவது சந்தேக நபரை வெளியில் கொண்டு சென்று விசாரணை மேற்கொள்வதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக அபாயகரமான ஆயுதங்கள் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியது போன்ற குற்றச்சாட்டுக்களில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில்

