ஹுனுப்பிட்டிய ரயில் கடவையில் விபத்து, ரயில் போக்குவரத்து தாமதம்

Posted by - November 21, 2017

ஹுனுப்பிட்டிய ரயில் கடவையில் இன்று (21) அதிகாலை கொள்கலன் ஏற்றிவந்த லொறியொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் பிரதான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலில் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதேவேளை, தெமட்டகொட பகுதியில் மரமொன்று விழுந்துள்ளதனால், கொழும்பு – அவிசாவலை ரயில் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டமை ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி – ஜே.வி.பி

Posted by - November 21, 2017

எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் காலியில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் பெண்களின் பங்களிப்பு அரசியலில் குறைந்து காணப்பட்டதனால் அவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படுமெனச் சமூகத்தில் பரவலாகப் பேசப்பட்டது. தேர்தல் சட்டமூலம் தயாரிக்கப்படும் போது,

அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்கட்சி விலகினால் மட்டுமே கூட்டணி – நாமல்

Posted by - November 21, 2017

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டமைப்பை பேண, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு முடியாது என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுமாக இருந்தால் மட்டுமே இது குறித்து கலந்துரையாட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பலபிடிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

பொலிஸ் அதிகாரியைத் தாக்கிய இராணுவச் சிப்பாய் கைது

Posted by - November 21, 2017

மரண வீடொன்றில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, ஆணைமடு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று மாலை ஆணைமடு – தட்டெவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும், தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆணைமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆணைமடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டு வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

Posted by - November 21, 2017

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட வெடிபொருட்களை சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்திருந்த நபர் ஒருவர் தலங்கமை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தரமுல்லை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கைது செய்யப்பட்ட வேளையில் செயலிழக்கச் செய்யப்படாத கைக்குண்டு ஒன்று, 4 துப்பாக்கி குண்டுகள், விளையாட்டு துப்பாக்கிகள் மேலும் பல துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் தலங்கம வடக்கு

தேசிய அடையாள அட்டை இல்லாத 3 லட்சம் வாக்காளர்கள்

Posted by - November 21, 2017

இலங்கையில் சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டை இல்லாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன்னதாக அனைத்து வாக்காளர்களுக்கும் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுப்பதை இலக்காக் கொண்டு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் – மீண்டும் ரஞ்சன் உயர்நீதிமன்றில் ஆஜர்

Posted by - November 21, 2017

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகியுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில், மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளுக்கு பதிலளிக்கவே அவர் இவ்வாறு நீதிமன்றம் சென்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி ஊடகங்களிடம் கருத்து வௌியிட்ட ரஞ்சன், இந்த நாட்டில் பெரும்பாலான சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என குறிப்பிட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கூறியமையானது, மக்களுக்கு சட்டம் தொடர்பில் இருக்கும் நம்பிக்கையை

மருத்துவ விஞ்ஞானத்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு ஏற்ப இலங்கை சுகாதாரத் துறையின் தரம் உயரும்!

Posted by - November 21, 2017

உலகெங்கிலும் மேற்கொள்ளப்படும் புதிய ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளுடன் மருத்துவ விஞ்ஞானத்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு ஏற்ப, இலங்கை சுகாதாரத்துறையை நவீனமயப்படுத்தி உயர்ந்த தரத்துடன் முன்கொண்டு செல்வதற்கு, தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினரை தமிழரசுக் கட்சி தன்வசம் இழுத்தது?

Posted by - November 21, 2017

ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியின் (ஈபிஆர்எல்எப்​) முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.