மரண வீடொன்றில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, ஆணைமடு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று மாலை ஆணைமடு – தட்டெவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும், தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆணைமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆணைமடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

