எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் காலியில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பெண்களின் பங்களிப்பு அரசியலில் குறைந்து காணப்பட்டதனால் அவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படுமெனச் சமூகத்தில் பரவலாகப் பேசப்பட்டது. தேர்தல் சட்டமூலம் தயாரிக்கப்படும் போது, உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை 25 வீதம் வரை அதிகரிக்கப்பட வேண்டுமெனப் பிரேரணை தற்போது நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் உள்ளுராட்சிமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது பெண்கள் சார்பில் பெறப்பட்ட சிறந்த வெற்றியாகும். இதனால் முன்னர் இல்லாத பல்வேறு விடயங்களுடன் உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

