ஹுனுப்பிட்டிய ரயில் கடவையில் விபத்து, ரயில் போக்குவரத்து தாமதம்

427 0

ஹுனுப்பிட்டிய ரயில் கடவையில் இன்று (21) அதிகாலை கொள்கலன் ஏற்றிவந்த லொறியொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் பிரதான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலில் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, தெமட்டகொட பகுதியில் மரமொன்று விழுந்துள்ளதனால், கொழும்பு – அவிசாவலை ரயில் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a comment