ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்கக் கோரி கொட்டகலையில் ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்கக் கோரி ஆசிரியர் பயிலுனர்கள் இன்று கொட்டகலையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற பாடசாலைகளில் சேவையாற்றவென இணைத்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்கக் கோரி இன்று காலை கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் காலை 8 மணியளவில் ஆசிரிய கலாசாலை முன்னுள்ள அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இவ்வார்ப்பாட்டகாரர்கள் “ஆசிரியர் உதவியாளர்களை உடனே 3 – ∏ இற்கு உள்வாங்கு” ,

