உருளைக்கிழங்கிற்கு நீக்கப்பட்ட வரியை மீண்டும் அமுல்படுத்த வேண்டும்.!

269 0

உருளைக்கிழங்கிற்கான வரியை நீக்கியதன் காரணமாக மலை­யக விவ­சா­யிகள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுப்பதாக சபையில் சுட்­டிக்­காட்­டிய கல்வி இரா­ஜங்க அமைச்சர் வீ.இரா­தா­கி­ருஷ்ணன், நீக்கப்பட்ட வரி மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்பெற்ற 2018 ஆம் ஆண்­டுக்­கான வர­வு­–செ­ல­வுத்­ திட்­டத்தின் கமத்­தொழில், மகா­வலி அபி­விருத்தி மற்றும் சுற்­றாடல், நீர்ப்­பா­சன மற்றும் நீர் வள­ முகா­மைத்­துவம், ஆரம்பக் கைத்­தொழில் ஆகிய அமைச்­சுக்­க­ள் தொடர்­பான குழுநிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனை வலியுறுத்தினார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

விவ­சா­யத்­துறையைப் பொறுத்தளவில் புதிய தொழில்­நுட்பம் எமது நாட்­டிற்கு அறி­முகம் செய்து வைக்­கப்­பட வேண்டும். அதன் மூல­ம் எங்­க­ளு­டைய உற்­பத்தி செலவை குறைக்க முடியும். விவ­சா­யிகள் விவ­சா­யத்­துக்­கான உற்­பத்தி செலவை அதி­க­ரிக்­கின்ற கார­ணத்தால் அதற்கு ஏற்ற விலை கிடைக்­கா­விட்டால் பெரும் பொரு­ளா­தார நஷ்­டத்தை சந்­திக்க வேண்­டி­யுள்­ளது. இதன் கார­ண­மாக அவர்கள் வங்­கி­களில் விவ­சா­யத்­துக்காக பெற்றுக் கொண்ட கடன்­களை மீள செலுத்த முடி­யாத ஒரு நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. அர­சாங்­கத்­திற்கு எதி­ராக போராட்டம் நடத்தி அந்த கடன் தொகையை இரத்து செய்­யு­மாறு கோரிக்கை விடுக்­கின்­றார்கள். இதன்மூலம் அர­சாங்­கத்­துக்கும் திறை­சே­ரிக்கும் பாரிய நஷ்டம் ஏற்­ப­டு­கின்­றது. எனவே புதிய தொழில்­நுட்­பத்தை அறி­முகம் செய்­வதன் மூல­ம் உற்­பத்தி செல­வு­களை குறைத்துக் கொள்ள முடியும் என நான் எதிர்­பார்க்­கின்றேன்.

அதே நேரம் எங்­க­ளு­டைய நாட்டின் அனைத்து விவா­சா­யி­க­ளை

யும் அவர்கள் செய்­கின்ற விவ­சாய பயிர்­க­ளுக்கு அமைய அவற்றை ஏற்­று­மதி செய்­வ­தற்கும் விவ­சாய அமைச்சின் மூல­மாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அப்­படி செய்தால் எங்­க­ளு­டைய நாட்டில் இருக்­கின்ற இளைஞர், யுவ­தி­க­ளுக்­கான தொழில் வாய்ப்­பையும் ஏற்­ப­டுத்த முடியும். எமது நாடு சுதந்­திரம் அடைந்த காலம் முதல் விவ­சாய நாடாக இருந்­தாலும் இன்னும் விவ­சா­யத்தில் தன்­னி­றைவு அடை­யாதிருக்­கின்­றது. நான் அண்­மையில் பங்­க­ளாதேஷுக்கு சென்­றி­ருந்த பொழுது அவர்கள் விவ­சா­யத்தில் தன்­னி­றைவு கொண்ட ஒரு நாடாக இருப்­பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்­தது.

ஆனால் அவர்கள் எங்­க­ளுக்கு பின்னால் சுதந்­தி­ரத்தை பெற்றுக் கொண்­ட­வர்கள். எங்­க­ளு­டைய பொரு­ளா­தா­ரத்­துடன் ஒப்­பிட்டுப் பார்க்­கின்ற பொழுது அவர்­க­ளு­டைய பொரு­ளா­தாரம் பின்­தங்­கிய நிலை­யி­லேயே இருக்­கின்­றது. அப்­ப­டி­யானால் ஏன் எங்­க­ளு­டைய நாட்டை விவ­சா­யத்தில் தன்­னி­றைவு அடைந்த ஒரு நாடாக மாற்றி அமைக்க முடி­யாது? பல நாடு­க­ளிலும் நச்­சுத்­தன்மையற்ற, சூழ­லுக்கு பாதிப்பை ஏற்ப­டுத்­தாத வகையில் விவ­சா­யத்தை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர். அவர்­க­ளு­டைய அந்த முறையை எங்­க­ளு­டைய நாட்­டிலும் அறி­முகம் செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

எங்­க­ளு­டைய விவ­சா­யி­களை தெரிவு செய்து அவர்­களை வெளிநா­டு­க­ளுக்கு அனுப்­பி­வைத்து அவர்­க­ளுக்­கான பயிற்­சி­களை ஏற்­பாடு செய்து கொடுப்­ப­தற்கும் அவர்கள் அங்கு சென்று கற்­கின்ற விட­யங்­களை இங்­குள்ள விவசா­யி­க­ளுடன் பகிர்ந்து கொள்­வ­தற்குமான ஏற்­பா­டு­க­ளையும் இந்த அமைச்சு முன்­னெ­டுக்க வேண்டும்.

எங்­க­ளு­டைய நாட்டில் இருக்­கின்ற அனைத்து குளங்­க­ளையும் அபி­வி­ருத்தி செய்து மழைக் கா­லங்­களில் நீரை சேமிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­பட வேண்டும். விசே­ட­மாக எங்­க­ளு­டைய மலையக பகு­தி­களில் உள்ள குளங்­களை அபி­வி­ருத்தி செய்தால் அதன்மூல­மாக இந்த நாட்டின் அனைத்து பகு­தி­க­ளுக்கும் நீரை கொண்டு செல்­வது மிக இல­கு­வாக இருக்கும்.அது மட்­டு­மல்­லாமல் வரட்­சி­யான காலங்­க­ளிலும் விவ­சா­யத்­திற்­கான நீரை பெற்றுக் கொடுக்க முடியும். மலை­யக விவ­சா­யிகள் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே விவசா­யத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள்.அவர்­க­ளுக்­கான உரு­ளைக் ­கி­ழங்கு உற்­பத்­திக்கு உரிய விலை கிடைக்க வேண்டும்.

வரவு – செலவுத் திட்­டத்தில் விவ­சாய அமைச்­சுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள நிதி­யா­னது 16800 மில்­லியன் ரூபா­வாகும். அது தவிர வரவு– செலவுத் திட்ட முன்­மொ­ழி­வுகள் 4000 மில­லியன் ரூபா­வாகும். உர­மா­னி­யத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை 35000 மில்­லியன் ரூபா­வாகும்.மொத்­த­மாக 55800 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

நெற்­கா­ணிகள் மற்றும் தொடர்­பு­டைய நீர் வழங்கல் அபி­வி­ருத்­திக்கு 28 வீதமும் உணவு பாது­காப்­பிற்­காக 27 வீதமும் விவ­சாய தொழில் முயற்சி வர்த்­த­கத்­துக்கு 4 வீதமும் அனர்த்த முகா­மைத்­துவ பங்­க­ளிப்­புக்காக 8 வீதமும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இதில் விவ­சாய தொழில் முயற்சி வர்த்தகத்துக்கு இன்னும் அதிகமாக ஒதுக்க வேண்டும்.

உருளைக்கிழங்கின் வரி நீக்கம் காரணமாக எங்களுடைய விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கான நீக்கப்பட்ட வரியை மீண்டும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களுடைய விவசாயிகள் அனைவரும் மீண்டும் படுகுழியில் தள்ளப்படு வதோடு அவர்களுடைய உடமைகள் அனைத்தையும் இழந்து அரசாங்கத்துக்கு பெரும் சுமையாக மாறிவிடுவார்கள் என்றார்.

Leave a comment