இலங்கை மீனவரின் வலையில் சிக்கிய அதிஷ்டம்: ரூ.2 கோடி

Posted by - November 23, 2017

மிகவும் அரிதான மீன் வகைகளுள் ஒன்றான புளுபின் ரூனா (bluefin tuna), நீர்கொழும்பு – மங்குளி கடற்பகுதியில் மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்த் தேசிய உணர்வுடைய எவரும் இந்த தேசிய கொடியை ஏற்றுக் கொள்ளவில்லை!

Posted by - November 23, 2017

கடந்த சில நாட்களாக தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் சிலரும், ஊடகங்களும் தேசிய கொடி விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆவா குழுவின் முக்கியஸ்தர் சின்னா கைது

Posted by - November 23, 2017

ஆவா குழுவின் முக்கியஸ்தர் ஒருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். சுதுமலை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் வைத்து இன்று (23.11) காலை மானிப்பாய் பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர். 

தேசிய கொடி விவகாரம்; ஆளுநர் முதலமைச்சரிடம் விளக்கம் கோரி கடிதம்

Posted by - November 23, 2017

வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியை புறக்கணித்த விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே விளக்கம் கோரியுள்ளார். 

உப காவற்துறை பரிசோதகர் ஒருவர் கைது

Posted by - November 23, 2017

தங்காலை காவற்துறையில் சேவையாற்றிய உப காவற்துறை பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தங்காலை தலைமை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். 16 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தங்காலை காவற்துறை அத்தியட்சகர் காரியாலயத்திற்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டுக்கமையே இந்த கைது இடம்பெற்றுள்ளது

சபாநாயகர் உடனடியாக பதவி விலக வேண்டும்.!

Posted by - November 23, 2017

சபாநாயகர் பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாப்பவர் என்றால் அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

யாழில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தீ மூட்டி அழிப்பு

Posted by - November 23, 2017

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற வலயத்துக்குட்பட்ட பகுதிகளில் பிடிபட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கஞ்சா போதைப்பொருள் இன்று தீமூட்டி எரிக்கப்பட்டது.வழக்குகள் நிறைவடைந்து சான்றுப் பொருள்களாகக் காணப்பட்ட கஞ்சா போதைப் பொருளே இவ்வாறு அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் ஆகியோர் முன்னிலையிலேயே இந்த சான்றுப் பொருள்கள் நீதிமன்ற ஊழியர்களினால் தீமூட்டி எரித்து  அழிக்கப்பட்டன.

விபத்தில் இருவர் பலி ஒருவரை காணவில்லை: மஹியங்கனையில் கோரச்சம்பவம்

Posted by - November 23, 2017

மஹியங்கனை மாபாகட பிரதேசத்தில் பயணித்த கார் மகாவலி வியானா கால்வாயினுள்  குடைசாய்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காணாமற் போயுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 43 வயதுடைய கணவரும் மற்றும் 40 வயதுடைய அவரின் மனைவியுமே விபத்தில்  உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த தம்பதியரின் 17 வயதுடைய மகனே காணாமற் போயுள்ளார். கண்டி – மெனிக்ஹின்ன பிரதேசத்தில் இருந்து மஹியங்கனை கந்தகெடிய பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கழக்கமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் காணாமல்

9 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு கடூழியச்சிறை

Posted by - November 23, 2017

யாழ்ப்பாணத்தில் 9 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் ஒருவருக்கு ஓராண்டு கடூழியச் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த சிறுமியை 65 வயதான வயோதிபர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ் வழக்கு தொடர்பான விசாரணைகளில் தாம் குறித்த துஷ்பிரயோக குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாக வயோதிபர் ஏற்கொண்டதிற்கு