தேர்தல் ஆணைக்குழுவின் விசேட தீர்மானம் நாளை

Posted by - November 24, 2017

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விசேட தீர்மானமொன்றை மேற்கொள்வதற்காக தேர்தல் ஆணைக்குழு நாளை பிற்பகல் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாளை எடுக்கப்படும் இந்த விசேட தீர்மானம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியா தென் மேற்கு பிரதேசத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு.

Posted by - November 24, 2017

தேச விடுதலைக்காய் உலகம் வியக்கும் சாதனைகளை தேசியத்தலைவனின் கீழ் நிகழ்த்தி புதிய புறநானூற்று புலிகளாய் வராலாற்று தாயின் மடி உறங்கும் மாவீரச்செல்வங்களை ஈன்றவர்களையும் அவர்களோடு கூடப்பிறந்த உறவுகளையும் மதிப்பளிப்பு இன்று பிரித்தானியாவில் மூன்று இடங்களில் மிகச் சிறப்பாகவும் எழுச்சியாகவும் நடை பெற்றது. மண்ணுக்காகவும் மக்களுக்காவும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை வணங்கிப் போற்றும் அதே வேளை அவர்களைப் பெற்றெடுத்தவர்ளையும் உடன் பிறப்புகளையும் போற்றி மதிப்பளிக்கும் வைபவம் தமிழீழத் தேசியத் தலைவரால் ஆரம்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புலம்பெயர்

முன்னாள் போராளியை காணவில்லை!

Posted by - November 24, 2017

மன்னார் – எருக்கலம் பிட்டி 5ஆம் கட்டை பகுதியில் வசித்து வரும் தனது கணவரான முன்னாள் போராளி ஒருவர் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபராக விதான பத்திரன பதவியேற்பு

Posted by - November 24, 2017

வவனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சோமரத்தின விதான பத்திரன இன்று  காலை 8.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வியப்பின் விலாசங்கள் மாவீரர்கள்.

Posted by - November 24, 2017

எங்கள் தேசத்தின் எல்லைகளை உயிர்ப்பூவால் உருவகித்த நாயகரே…! அரும்பிய இளமைக் கால விருப்புகளை விரும்பியே மண் வாழ விதைத்தவரே…! கவிதை வரைபுக்குள் கட்டிவிட முடியாத விண்தொட்ட வியத்தகு கொடைகளை தமிழரின் மரபுக்குள் எப்படித்தான் தக்கவைப்பது… அகத்திரை கிழித்து உம் முகத்தினை நாடுகின்றோம் இயற்கையின் அசைவுகள் எதுவுளவோ அவை விழிதிறந்து உணர்வோடு உறவாடும் தருணமே. மண்ணை மக்களை மொழியை தலைவனை தன்மானத்தை எல்லை கடந்து நேசித்தமையின் அடையாளமே உயிர்க்கொடை உங்கள் விழிமடல் மூடாத நீள இராத்திரியில் – நீங்கள்

குற்ற விசாரணைகளுக்கான தெற்காசிய தகவல் பரிமாற்ற மையம் பற்றிய கலந்துரையாடல்

Posted by - November 24, 2017

குற்ற விசாரணைகளுக்கான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கான தெற்காசிய பிராந்திய மையமொன்றினை ஸ்தாபிப்பதற்கான உயர் மட்ட அதிகாரிகளின் கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவின் தலைமையில் இன்று கொழும்பில் இடம்பெற்றது.