தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டி!

Posted by - November 24, 2017

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டியிடும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கட்சியின் பிரதி தலைவருமான நா.திரவியம் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கோத்தாபயாவின் கைது நிறுத்தம்

Posted by - November 24, 2017

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கடந்த 22 ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவால் கைது செய்யப்படவிருந்தும், பௌத்த பிக்குகள் சிலர் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் குறித்த கைது காலவரையறையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் நிதியை தவறாகப் பயன்படுத்தி, டி.ஏ.ராஜபக்ச நினைவிடத்தை அமைத்தார் என்ற குற்றசாட்டின் பேரில் நீண்ட விசாரணைகளின் பின்னர் கடந்த 22ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவால் கோத்தாபய ராஜபக்ஷ கைது செய்யப்படவிருந்தார். என்றாலும் கடந்த 21ஆம்

அனர்த்தங்களை எதிர்கொள்வதற்காக ஐந்தாண்டு திட்டம்

Posted by - November 24, 2017

எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களின் போது வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்காக 05 ஆண்டு திட்டம் ஒன்றை வகுக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கூறியுள்ளது. 

கேராள கஞ்சாவுடன் குடும்ப பெண் கைது!

Posted by - November 24, 2017

2 கிலோ கேரளா கஞ்சா மற்றும் 60 ஆயிரம் ரூபா பணத்துடன் குடும்ப பெண் ஒருவர் இன்று (24.11) கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளனர். 35 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணின் வீட்டில் இருந்து 2 கிலோ கேரளா கஞ்சா மற்றும் 60

ஜனாதிபதியின் உறவினரின் வீட்டில் கொள்ளை

Posted by - November 24, 2017

ஜனாதிபதியின் உறவினர் ஒருவரின் வீடு உள்ளிட்ட 40 வீடுகளில் கொள்ளையடித்த சந்தேகநபர் ஒருவர் இன்று தம்புத்தேகம, கொன்வேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பிச்சென்றுள்ள சந்தேகநபருக்கு எதிராக கொள்ளைச்சம்பவங்கள் தொடர்பில் சுமார் 40க்கும் அதிகமான வழக்குகள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் ஜனாதிபதியின் உறவினர் ஒருவரின் வீட்டில் 20 பவுன் நகை மற்றும் 450,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வடமாகாணத்திற்கு 07 தங்க விருதுகள்; முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அமைச்சுக்கும் விருது

Posted by - November 24, 2017

பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையமயப் படுத்தப்பட்ட கணணி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாணசபைகள், மாவட்ட செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்

தேர்தலை விரைவாக நடாத்த கோரும் பிரேரணை பாராளுமன்றத்துக்கு

Posted by - November 24, 2017

உள்ளூராட்சி மன்ற தேர்தலை அவசரமாக நடாத்த கோரும் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றிக்கொள்வது தொடர்பில் கட்சி தலைவர்களுக்கிடையில் உத்தியோகபூர்வமற்ற சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அவ்வாறான பிரேரணை ஒன்று கொண்டுவரப்படுமானால் அதற்கு ஆதரவளிப்பதற்கு அனைத்து கட்சிகளினதும் இணக்கம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தேர்தலை விரைவாக நடாத்த மேற்கொள்ளவேண்டிய சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக அறிவிக்குமாறு இந்திய விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டத்தரணிகள் குழுவொன்றுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - November 24, 2017

பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த காரொன்று மஹியங்கனை 17ம் கட்டை வியானா நீரோடையில் வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், இவ் விபத்தில் காணாமல் போயிருந்த இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கெமுனுபுர ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.நீரில் மூழ்கிய காரில் பயணம் செய்த இரட்டைச் இளைஞர்களில் ஒருவருடைய சடலமே இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை

தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களில் மாற்றம்

Posted by - November 24, 2017

தொழில் வாய்ப்பு சந்தைக்கு ஏற்ற வகையில், பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று உயர் கல்வி மற்றும் நெடுஞ்சதலைகள் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகளை அடுத்த வருடத்திற்குள் தீர்த்து வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் பல்கலைக்கழங்களில் உள்ள வாசிகசாலை, உணவுச்சாலை மற்றும் மலசலகூட வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஐயாயிரம்