தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களில் மாற்றம்

276 0

தொழில் வாய்ப்பு சந்தைக்கு ஏற்ற வகையில், பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று உயர் கல்வி மற்றும் நெடுஞ்சதலைகள் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகளை அடுத்த வருடத்திற்குள் தீர்த்து வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் பல்கலைக்கழங்களில் உள்ள வாசிகசாலை, உணவுச்சாலை மற்றும் மலசலகூட வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஐயாயிரம் கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர்தெரிவித்தார்.

Leave a comment