நெதர்லாந்தில் அல்மேர என்னும் பிரதேசத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் 2017
நெதர்லாந்தில் அல்மேர என்னும் பிரதேசத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் 27-11-2017 திங்கக்கிழமை வெகுசிறப்பாக நினைவு கூரப்பட்டது. தமிழீழ விடிவிற்காய் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எம் மண்ணின் மைந்தர்களை நினைவுகூர இவ்வாண்டு வழமையை விட கூடுதலான மக்கள் கலந்து கொண்டார்கள். 12.35 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி பொதுச்சுடரினை மாவீரர் குடும்பத்தினர் ஏற்றிவைத்தனர்.அதனைத் தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பின் மாவீரர்நாள் அறிக்கை வாசிக்கப்பட்டு சரியாக 01.35 இற்கு மணியொலி எழுப்பப் பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டபின்னர் ,01.37 மணிக்கு துயிலும்
சுவிஸ் மாவீரர் நாள் நிகழ்வில் திருமுருகன் காந்தி உரை
சுவிட்சர்லாந்து மாவீரர் நாள் நிகழ்வில் தோழர் திருமுருகன் காந்தி உரை தமிழீழ இனப்படுகொலையிலிருந்து நாம் உணர வேண்டியது என்ன? இனி நாம் செய்ய வேண்டியது என்ன? தமிழீழ விடுதலைக் கோரிக்கையை நாம் எப்படி முன்னகர்த்தப் போகிறோம்? விரிவான உரை. அவசியம் பார்த்து பகிருங்கள்.
மாவீரர் நாள் நியூசிலாந்து – 2017
மாவீரர் நாள் தமிழீழ விடுதலைக்காகப் போராடி தமது இன்னுயிரை ஈந்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் ஒரு நாள்ஆகும். இம்மாவீரர்கள் எம் வரலாற்றின் அழியா நினைவுச் சின்னங்கள். எம்மினம் வாழ தம் வாழ்வை தியாகம் செய்த தியாச்சுடர்கள்.இவர்களின் உன்னத தியாகத்தை போற்ற எமக்கு கிடைத்த ஒரு உன்னத நாளே இம் மாவீரர் நாள். இம்மாவீரர் நாள் வழமை போல் இம்முறையும் நியூசிலாந்து மண்ணிலே கார்த்திகை மாதம் 27ம் திகதி திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் ,
டென்மார்க்கில் தேசிய மாவீரர் நாள் மிகவும் உணர்புபூர்வமாகவும்,எழுச்சியாகவும் நடைபெற்றது.
மாவீரர் நாள் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது .அதன் பின்பு டென்மார்க் பொறுப்பாளரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு,சுடர்வணக்கம், மலர்வணக்கம்,அகவணக்கம் நடைபெற்றது தமிழீழக்கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய தேசப்புதல்வர்களின் கல்லறைக்கு சுடரேற்றும் போது மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. எமது தேசியத்தலைவரின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரை திரையில் காண்பிக்கப்பட்டது . தேசியத்தலைவரின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்து, மாவீரர் நாள் மண்டபத்தில் இளையோர்கள் முன்னின்று மாவீரர் நாள் நிகழ்வை மிகவும் உணர்புபூர்வமாக நடத்தியிருந்தார்கள். தமிழீழ தாய்நாட்டின்
தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உத்தியோகபூர்வ மாவீரர்நாள் அறிக்கையை வெளியிட்டுள்ளனர் – 2017
தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம். 27.11.2017. எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். உயர்ந்த இலட்சியத்திற்காக தமது உயிர்களைத் தியாகம்செய்யத் துணிந்த உத்தமர்களை நினைவுகொள்ளும் நாள். மனிதவாழ்வின் சராசரி ஆசைகளைத் துறந்து தமிழினத்தின் மீட்சிக்காக அயராதுழைத்து வீழ்ந்த புனிதர்களைப் பூசிக்கும் புனிதநாள். போராட்ட விழுமியங்களைப் போற்றி உயரொழுக்கக் கட்டுக்கோப்புடன் போராடி மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் விதையாகிப்போன இந்த மானமறவர்களை ஈன்றெடுத்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் என்றும் போற்றுதற்குரியவர்கள். எமது மாவீரர்கள்
சனில் நெத்திகுமார தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் நிராகரிப்பு
பிணை முறி விநியோக விவகாரத்தில் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் தம்மை கைது செய்ய வேண்டாம் என்று கோரி, சனில் நெத்திகுமார தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த அடிப்படை உரிமை மனு இன்று 3 நீதியரசர்களைக் கொண்ட குழுவின் முன்னிலையில் பரிசீலனைக்கு வந்தது. பிணை முறி மோசடி குறித்த விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளித்த அனீகா விஜேசூரிய மற்றும் அவரது சகோதரர் விஜித் விஜயசூரிய
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!
கடவத்தை பிரதேசத்தில் அதிவேக வீதியில் சேவையாற்றிய ஒருவர் மின்சார தாக்கி பலியாகியுள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் பலியானவர் 40 வயதானவர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மாவீரர் நாளில் மக்களின் எழுச்சிக்கு கூட்டமைப்புத் தலைவர்கள்மீதான அச்சமும் காரணம்- வடமாகாண முதல்வர்.
மாவீரர் நாள் வீரவணக்கத்தை தமிழ் மக்கள் எழுச்சியுடன் கடைப்பிடித்தமைக்கான காரணங்களில் ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களின் நடவடிக்கைகளில் கொண்டுள்ள அச்சமே எனத் தான் கருதுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “எங்கே எமது தலைவர்கள் விலைபோய் விடுவார்களோ? ஆட்சியாளர்கள் தரும் அரைகுறைத் தீர்வைத் தம்மீது திணித்து விடுவார்களோ? என்று எண்ணி அஞ்சி விடுதலை வீரர்களின் நினைவேந்தலில் மன நிறைவு காண தமிழ் மக்கள எத்தனித்துள்ளார்கள்” என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகங்களுக்கு முதலமைச்சர் அலுவலகத்தால்
கோத்தாவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யுங்கள்.!
கோத்தபாய ராஜபக் ஷ ஏதேனும் தவறிழைத்திருந்தால், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யுங்கள். அதைவிடுத்து அவரை கைது செய்வதோ அல்லது அவரை சிறையில் அடைப்பதோ முறையாகாது என மெதகொட அபேதிஸ்ஸ தேரர் கண்டனம் தெரிவித்தார். எலிய அமைப்பினால் இன்று கொழும்பு தேசிய நூலகசாலையின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்

