தினகரன் பக்கம் சாய முடிவா?: கண்காணிப்பு வளையத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

Posted by - December 28, 2017

ஆர்.கே நகரில் தினகரன் வெற்றி பெற்றதற்கு பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ரகசியமாக வாழ்த்து கூறியதாக முதல்வருக்கு புகார் வந்ததை அடுத்து அவர்கள் அனைவரும் கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #TTVDhinakaran #ADMK

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்

Posted by - December 28, 2017

தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவொன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் குழுவொன்றுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். முல்லைத்திவு புதுக்குடியிருப்பு பரதேசத்தில் நேற்று இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் சம்பந்தமாக இதன்போது பேசப்பட்டுள்ளதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலை புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் வெற்றிபெறுவதற்காகவே இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்ற முன்னாள்

இலங்கைக்கு ஹெரோய்ன் கொண்டு வந்த இந்தியர் கைது

Posted by - December 28, 2017

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இலங்கை வந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யூ.எல். 126 என்ற விமானத்தில் இலங்கை வந்த அவர் இன்று அதிகாலை 5.20 மணியளவில் இலங்கை சுங்கப் பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 212 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி சுமார் 2,100,000 ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழ்நாடு, சென்னையை சேர்ந்த 33

தமிழ் மக்களுக்காக விக்கினேஸ்வரனை விட நான் அதிகம் குரல் கொடுத்துள்ளேன்-டிலான்

Posted by - December 28, 2017

வடக்கு முத­ல­மைச்சர் இன்று  அமர்ந்­தி­ருக்கும்  முத­ல­மைச்சர்  கதி­ரைக்­கு­ரிய   மாகாண சபையை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக  நாங்கள்   பாரிய போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தோம்.     தமிழ் மக்­க­ளுக்­காக  விக்­கி­னேஸ்­வ­ரனை விட   நான்   அதிகம் குரல் கொடுத்­துள்ளேன் என்­ப­தனை  சம்­பந்­தனை கேட்டால் கூறுவார் என்று ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத் தில் அர­சாங்­கத்தில் இருந்­து­கொண்டு நான் யுத்த விரோத போராட்­டத்தில் கலந்­து ­கொண்டேன். ஆனால் அவ்­வா­றான போராட்­டங்­களில் நான் விக்­கி­னேஸ்­வ­ரனை காண­வில்லை 

மனோ கணேசனின் முடிவுக்கு விக்னேஸ்வரன் ஆதரவு

Posted by - December 28, 2017

“அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி தனித்தும், சேர்ந்தும் பல்வேறு உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடுவது சரியானதே. அதிலும் கொழும்பு மாநகரில் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தனது அரசுக்குள்ளே தன்னைப் பலப்படுத்திக்கொள்ளவும் எமது தனித்துவத்தை வெளிக்காட்டவும் அவர் முனைவது சாலச்சிறந்தது என தான் கருதுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று அமைச்சர் மனோ கணேசனுக்கும், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பு நடைபெற்றது. இதன்

வன்முறை வெடித்தால் தேர்தல் ஒத்திவைக்கப்படும் – தேர்தல் ஆணையாளர்

Posted by - December 28, 2017

“உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பின்போது தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் சம்பவங்கள் இடம்பெறுமானால் இரண்டு வாரங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படும்” என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். எந்தத் தொகுதியில்தேர்தல் வன்முறை நடக்கின்றதோ அந்தத் தொகுதிக்கான தேர்தலே இவ்வாறு இடைநிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. “வாக்களிப்பு தினத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் வேட்பாளராலோ அல்லது ஆதரவாளராலோ

1,63,104 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லத் தகுதி

Posted by - December 28, 2017

வெளியாகியுள்ள உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய 1,63,104 பேர் பல்கலைக்கழகம் செல்லும் தகுதியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்வதற்கு ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்பு விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் 2,53,483 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பியசேன கமகே இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்

Posted by - December 28, 2017

சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பியசேன கமகே இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பியசேன கமகே, கீதா குமாரசிங்க இழந்த பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதி அமைச்சர் நிமல் லான்சா கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்தார்

Posted by - December 28, 2017

முன்னாள் பிரதி அமைச்சர் நிமல் லான்சா கூட்டு எதிர்க்கட்சிக்குத் தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார். நீர்க்கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் பதவியில் இருந்து கடந்த 19ஆம் திகதி நிமல் லான்சா இராஜினாமா செய்திருந்தார். இவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

205 பேரின்உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தம்

Posted by - December 28, 2017

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு 2017 ஆம் ஆண்டில் முகம்கொடுத்த 205 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களின் பெறுபேறுகள் இன்று (28) அகதிகாலை வெளியாகின. இவ்வாறு பெறுபேறுகள் வெளியானவர்களிலேயே 205 பேருடைய பெறுபேறுகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன. பரீட்சை முறைகேடுகள் காரணமாக இவ்வாறு பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்துள்ளார். இன்று வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் 163104 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கான அனுமதியைப்