முன்னாள் பிரதி அமைச்சர் நிமல் லான்சா கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்தார்

420 0

முன்னாள் பிரதி அமைச்சர் நிமல் லான்சா கூட்டு எதிர்க்கட்சிக்குத் தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

நீர்க்கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் பதவியில் இருந்து கடந்த 19ஆம் திகதி நிமல் லான்சா இராஜினாமா செய்திருந்தார். இவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment