பியசேன கமகே இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்

251 0

சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பியசேன கமகே இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பியசேன கமகே, கீதா குமாரசிங்க இழந்த பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment