காங்கிரஸ் முன்னாள் எம்பி வள்ளல்பெருமான் காலமானார்
சிதம்பரம் தொகுதியில் 3 முறை எம்பியாக பணியாற்றிய டாக்டர் வள்ளல்பெருமான்(69) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் வள்ளல்பெருமான், 1984, 1989, 1991-ம் ஆண்டுகளில் சிதம்பரம் தொகுதி எம்பியாக 3 முறை பணியாற்றியவர். 2001-ல் ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை சார்பில் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இவரது மனைவி சரளாவும் டாக்டராவார். ஷிவ்மோகா என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார்

